• May 03 2024

வடக்கில் இன்று முதல் வெப்ப அலை...!மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை...!

Sharmi / Apr 3rd 2024, 8:22 am
image

Advertisement

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இன்றையதினம் முதல் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இன்று  முதல்(03) வடக்கு மாகாணத்தின் வவுனியா,மாங்குளம், முறிகண்டி, நட்டாங்கண்டல், துணுக்காய், ஓமந்தை, கரிப்பட்ட முறிப்பு,  சின்னத்தம்பனை, பாலைப் பாணி, மூன்றுமுறிப்பு, ஐயன் குளம், மடு,கீரி, தட்டாங்குளம், பகுதிகளில்  காலை 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை வெப்பநிலை 41 பாகை செல்சியஸினை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதன் காரணமாக வடக்கு மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளின் பல இடங்களில் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் எனவும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இன்று முதல் வெப்ப அலை.மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இன்றையதினம் முதல் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.அதேவேளை, இன்று  முதல்(03) வடக்கு மாகாணத்தின் வவுனியா,மாங்குளம், முறிகண்டி, நட்டாங்கண்டல், துணுக்காய், ஓமந்தை, கரிப்பட்ட முறிப்பு,  சின்னத்தம்பனை, பாலைப் பாணி, மூன்றுமுறிப்பு, ஐயன் குளம், மடு,கீரி, தட்டாங்குளம், பகுதிகளில்  காலை 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை வெப்பநிலை 41 பாகை செல்சியஸினை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் காரணமாக வடக்கு மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளின் பல இடங்களில் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் எனவும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement