• Dec 10 2025

நாட்டின் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Aathira / Nov 15th 2025, 8:03 am
image

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும்  நிலைகொண்டுள்ளது  என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.   

ஊவா  மாகாணத்திலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்,

சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும்  நிலைகொண்டுள்ளது  என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.   ஊவா  மாகாணத்திலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்,சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement