• Aug 03 2025

விமான நிலையங்களில் அதிநவீக கண்காணிப்பு கமராக்கள் - இலங்கையில் கடுமையாகும் பாதுகாப்பு

Chithra / Aug 3rd 2025, 1:48 pm
image

 

இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லை என பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலவச விசா விடயமானது சட்டமா அதிபரிடத்தில் ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. 

அதேநேரம், இலவச விசா நடைமுறையானது ஆறுமாதங்களுக்கு ஒருதடவை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதோடு,

விமான நிலையத்தில் பயணிகள் வருகையில் அதிநவீக கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இதனைவிடவும், நாட்டிற்கு வருகை தருவதற்கு முன்னதாகவே பயணிகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வற்கான பயணத்தின் முன்னரான தகவல்கள் சேகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் உள்ளிட்ட நாற்பது நாடுகளுக்கு இலவசமாக விசா வழங்குவதற்கு அரசாங்கம் அறிவிப்பைச் செய்துள்ள நிலையில், இஸ்ரேலில் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளிட்டவர்கள் நாட்டுக்குள் வருகை தரும் நிலைமைகள் இலகுவாக்கப்படுவதால் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் ஏற்படும் என்று எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில் அவ்விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிட்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனைவிடவும், இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்படவுள்ளன. அதற்கான கேள்வி அனுமதிப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன. 

அம்முறை அமுலாக்கப்படுகின்றபோது, பயணிகள் குறித்த தரவுகள் மேலதிகமாக கிடைப்பதற்கு அதிகமான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன  என தெரிவித்தார். 

விமான நிலையங்களில் அதிநவீக கண்காணிப்பு கமராக்கள் - இலங்கையில் கடுமையாகும் பாதுகாப்பு  இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லை என பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலவச விசா விடயமானது சட்டமா அதிபரிடத்தில் ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. அதேநேரம், இலவச விசா நடைமுறையானது ஆறுமாதங்களுக்கு ஒருதடவை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதோடு,விமான நிலையத்தில் பயணிகள் வருகையில் அதிநவீக கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனைவிடவும், நாட்டிற்கு வருகை தருவதற்கு முன்னதாகவே பயணிகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வற்கான பயணத்தின் முன்னரான தகவல்கள் சேகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இஸ்ரேல் உள்ளிட்ட நாற்பது நாடுகளுக்கு இலவசமாக விசா வழங்குவதற்கு அரசாங்கம் அறிவிப்பைச் செய்துள்ள நிலையில், இஸ்ரேலில் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளிட்டவர்கள் நாட்டுக்குள் வருகை தரும் நிலைமைகள் இலகுவாக்கப்படுவதால் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் ஏற்படும் என்று எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.இந்நிலையில் அவ்விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிட்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதனைவிடவும், இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்படவுள்ளன. அதற்கான கேள்வி அனுமதிப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன. அம்முறை அமுலாக்கப்படுகின்றபோது, பயணிகள் குறித்த தரவுகள் மேலதிகமாக கிடைப்பதற்கு அதிகமான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன  என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement