• May 03 2024

பாகிஸ்தானில் உயர்கல்வி - இலங்கை மாணவர்களுக்கு அடித்த அதிஸ்டம்!

Chithra / Dec 14th 2022, 12:23 pm
image

Advertisement


பாக்.- இலங்கை உயர்கல்வி ஒத்துழைப்புத் திட்டத்தின் (HECP) கீழ் 37 இலங்கை மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர்வதற்காக பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர்.

‘இலங்கை மாணவர்களுக்கான அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்’ வென்ற இலங்கையைச் சேர்ந்த மேலும் 357 மாணவர்களும் எதிர்காலத்தில் பாகிஸ்தானை சென்றடையவுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மருத்துவம், பொறியியல், வணிகவியல், இயற்கை அறிவியல், சமூக அறிவியல் போன்ற அனைத்து முக்கிய துறைகளிலும் புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது.


இதேவேளை, 272 இலங்கை மாணவர்கள் ஏற்கனவே உயர்மட்ட பாக்கிஸ்தானிய பொதுத்துறை பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வருகின்றனர்.

பாக்கிஸ்தானிய மற்றும் இலங்கை கல்வியாளர்கள் சமகால ஆராய்ச்சிப் பகுதிகளில் இணைந்து பணியாற்றும் வகையில் விரைவில் ஆரம்பிக்கப்படும் திட்டத்தில் ஆசிரியர் பரிமாற்றக் கூறு ஒன்றும் இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானில் உயர்கல்வி - இலங்கை மாணவர்களுக்கு அடித்த அதிஸ்டம் பாக்.- இலங்கை உயர்கல்வி ஒத்துழைப்புத் திட்டத்தின் (HECP) கீழ் 37 இலங்கை மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர்வதற்காக பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர்.‘இலங்கை மாணவர்களுக்கான அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்’ வென்ற இலங்கையைச் சேர்ந்த மேலும் 357 மாணவர்களும் எதிர்காலத்தில் பாகிஸ்தானை சென்றடையவுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மருத்துவம், பொறியியல், வணிகவியல், இயற்கை அறிவியல், சமூக அறிவியல் போன்ற அனைத்து முக்கிய துறைகளிலும் புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது.இதேவேளை, 272 இலங்கை மாணவர்கள் ஏற்கனவே உயர்மட்ட பாக்கிஸ்தானிய பொதுத்துறை பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வருகின்றனர்.பாக்கிஸ்தானிய மற்றும் இலங்கை கல்வியாளர்கள் சமகால ஆராய்ச்சிப் பகுதிகளில் இணைந்து பணியாற்றும் வகையில் விரைவில் ஆரம்பிக்கப்படும் திட்டத்தில் ஆசிரியர் பரிமாற்றக் கூறு ஒன்றும் இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement