• Nov 19 2024

தேசிய மக்கள் சக்தியின் வரலாற்று வெற்றி; இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து..!

Sharmi / Nov 16th 2024, 9:27 am
image

நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளமைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 14 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தோஷ் ஜா சந்தித்து இந்திய அரசு சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பகிர்ந்துகொள்ளப்படும் ஜனநாயக விழுமியங்களை எடுத்துரைத்த அவர், இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த வெற்றி இலங்கையில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றத்தைக் குறிக்கிறது என்றும் தேசிய மக்கள் சக்திக்கு பரந்த மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ. சந்தோஷ் ஜா சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





தேசிய மக்கள் சக்தியின் வரலாற்று வெற்றி; இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து. நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளமைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த 14 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தோஷ் ஜா சந்தித்து இந்திய அரசு சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதேவேளை, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பகிர்ந்துகொள்ளப்படும் ஜனநாயக விழுமியங்களை எடுத்துரைத்த அவர், இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.இந்த வெற்றி இலங்கையில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றத்தைக் குறிக்கிறது என்றும் தேசிய மக்கள் சக்திக்கு பரந்த மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ. சந்தோஷ் ஜா சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement