• May 04 2024

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்- 29.09.2023! samugammedia

Sharmi / Sep 29th 2023, 6:34 am
image

Advertisement

மேஷம்


திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். சகோதரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்


அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

மிதுனம்


சுவாச பிரச்சனையால் அவதிப்படுவீர்கள். தொழிலுக்கு மறைமுக எதிர்ப்புகள் தோன்றுவதால் சங்கடப்படுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். பெற்றோரின் மருத்துவ செலவுக்காக நகையை அடகு வைப்பீர்கள். சொத்து பிரச்சனைக்காக சகோதரர்களே கொடுக்கும் தொல்லைகளை சமாளிப்பீர்கள்.

கடகம்



நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதித்துக் காட்டும் நாள்.

சிம்மம்



எதிர்ப்பானவர்கள் நண்பர்கள் என இரு தரப்பிடமிருந்தும் உதவி பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் சாதனை படைப்பீர்கள். வீடு கட்டுவதற்காக மனை இடம் வாங்கி பத்திரம் போடுவீர்கள். வெளிவட்டார செல்வாக்கு அதிகரித்து பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். நீண்ட காலமாக தொந்தரவு கொடுத்த கழுத்து வலியில் இருந்து விடுபடுவீர்கள்.

கன்னி


திடீரென்று ஏற்பட்ட தடங்கலால் வெளியூர் பயணத்தை ஒத்தி போடுவீர்கள். நல்லது நினைத்து உதவி செய்யப் போய் அவப் பெயரை சுமப்பீர்கள். வியாபாரத்தில் மந்தமான நிலை காணப்பட்டு மனச் சங்கடம் அடைவீர்கள். காதலியின் தொந்தரவால் இரவு தூக்கத்தை தொலைப்பீர்கள். உறவினர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் தோல்வி அடைவீர்கள்.

துலாம்



கலகலப்பாக பேசி பெண்களின் மனதை கவர்வீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன திருமண பேச்சு வார்த்தையை முடித்து வைப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த கூடுதலாக முதலீடு செய்வீர்கள். கடுமையாக உழைத்து வியாபாரத்தை பெருக்கி பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். மனதை அழுத்திய கவலையை மாற்றுவீர்கள்.

விருச்சிகம்


கடன் வாங்கி கடனை அடைப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் தடுமாற்றம் அடைவீர்கள். நண்பர்கள் மூலமாக கிடைக்க வேண்டிய உதவிகளை தாமதமாக பெறுவீர்கள் வெளிநாட்டிலிருந்து வரவேண்டிய பணம் தற்போது கைக்கு வராமல் சிரமப்படுவீர்கள். உற்பத்தியை பெருக்கி முதலாளியின் பாராட்டைப் பெற கடுமையாக பாடுபடுவீர்கள்.

தனுசு



முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்



நீண்ட காலமாக கட்டி வந்த எல்ஐசி தொகையை தொழிலுக்காக எடுப்பீர்கள். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தைக் கொண்டு வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். தள்ளாட்டமாக இருந்த வியாபாரத்தை நண்பர்களின் உதவியால் நிலை நிறுத்துவீர்கள். அரசாங்கத்தின் மூலமாகக் கிடைக்க வேண்டிய பலன்கள் தாமதமின்றி வருவதால் சந்தோஷப்படுவீர்கள்.

கும்பம்



கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

மீனம்


ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சிலர் உங்களை சீண்டிப்பார்ப்பார்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வியாபாரத்தில் கடன் தர வேண்டாம். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. சிக்கனம் தேவைப்படும் நாள்.

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்- 29.09.2023 samugammedia மேஷம்திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். சகோதரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.ரிஷபம்அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.மிதுனம்சுவாச பிரச்சனையால் அவதிப்படுவீர்கள். தொழிலுக்கு மறைமுக எதிர்ப்புகள் தோன்றுவதால் சங்கடப்படுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். பெற்றோரின் மருத்துவ செலவுக்காக நகையை அடகு வைப்பீர்கள். சொத்து பிரச்சனைக்காக சகோதரர்களே கொடுக்கும் தொல்லைகளை சமாளிப்பீர்கள்.கடகம்நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதித்துக் காட்டும் நாள்.சிம்மம்எதிர்ப்பானவர்கள் நண்பர்கள் என இரு தரப்பிடமிருந்தும் உதவி பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் சாதனை படைப்பீர்கள். வீடு கட்டுவதற்காக மனை இடம் வாங்கி பத்திரம் போடுவீர்கள். வெளிவட்டார செல்வாக்கு அதிகரித்து பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். நீண்ட காலமாக தொந்தரவு கொடுத்த கழுத்து வலியில் இருந்து விடுபடுவீர்கள்.கன்னிதிடீரென்று ஏற்பட்ட தடங்கலால் வெளியூர் பயணத்தை ஒத்தி போடுவீர்கள். நல்லது நினைத்து உதவி செய்யப் போய் அவப் பெயரை சுமப்பீர்கள். வியாபாரத்தில் மந்தமான நிலை காணப்பட்டு மனச் சங்கடம் அடைவீர்கள். காதலியின் தொந்தரவால் இரவு தூக்கத்தை தொலைப்பீர்கள். உறவினர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் தோல்வி அடைவீர்கள்.துலாம்கலகலப்பாக பேசி பெண்களின் மனதை கவர்வீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன திருமண பேச்சு வார்த்தையை முடித்து வைப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த கூடுதலாக முதலீடு செய்வீர்கள். கடுமையாக உழைத்து வியாபாரத்தை பெருக்கி பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். மனதை அழுத்திய கவலையை மாற்றுவீர்கள்.விருச்சிகம்கடன் வாங்கி கடனை அடைப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் தடுமாற்றம் அடைவீர்கள். நண்பர்கள் மூலமாக கிடைக்க வேண்டிய உதவிகளை தாமதமாக பெறுவீர்கள் வெளிநாட்டிலிருந்து வரவேண்டிய பணம் தற்போது கைக்கு வராமல் சிரமப்படுவீர்கள். உற்பத்தியை பெருக்கி முதலாளியின் பாராட்டைப் பெற கடுமையாக பாடுபடுவீர்கள்.தனுசுமுக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.மகரம்நீண்ட காலமாக கட்டி வந்த எல்ஐசி தொகையை தொழிலுக்காக எடுப்பீர்கள். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தைக் கொண்டு வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். தள்ளாட்டமாக இருந்த வியாபாரத்தை நண்பர்களின் உதவியால் நிலை நிறுத்துவீர்கள். அரசாங்கத்தின் மூலமாகக் கிடைக்க வேண்டிய பலன்கள் தாமதமின்றி வருவதால் சந்தோஷப்படுவீர்கள்.கும்பம்கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.மீனம்ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சிலர் உங்களை சீண்டிப்பார்ப்பார்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வியாபாரத்தில் கடன் தர வேண்டாம். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. சிக்கனம் தேவைப்படும் நாள்.

Advertisement

Advertisement

Advertisement