• May 02 2024

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகலில் இலங்கை அரசாங்கத்தின் கோரமுகம் அம்பலம்...! ரவிகரன் தெரிவிப்பு...! samugammedia

Sharmi / Sep 29th 2023, 6:48 am
image

Advertisement

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலில் இலங்கை அரசாங்கத்தின் கோரமுகம் வெளிப்படுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா குருந்தூர் மலையில் கட்டப்பட்ட சட்டவிரோத பௌத்த விகாரை வழக்கின் கட்டளைகளை தொடர்ந்து கிடைக்கப்பெற்ற நெருக்கடிகள், உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாக தனது பொறுப்புக்கள், பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்  ரவிகரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நீதிபதி சரவணராஜா அவர்களின் பதவி விலகலில் இலங்கை அரசாங்கத்தின் கோரமுகம் வெளிப்படுகின்றது. நீதிபதிக்கே இந் நிலமை என்றால் சாதாரண தமிழ் மக்கள் எவ்வளவு கொடூரமான அரசின் கீழ் , கொடூரமான அரசாங்கத்தை நடாத்திக்கொண்டிருக்கும் இனவாதிகளின் கீழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த விடயத்திலே நீதியின்பால் அவருக்கு கொடுக்கப்பட்ட மன அழுத்தங்கள் , உயிர் அச்சுறுத்தல்கள் ஊடகங்கள் மூலம் வெளிவந்திருக்கின்றது. இப்படியான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் கவனத்தில் எடுத்து தமிழ் மக்களுக்கு இப்படியான நெருக்கடிகள் இலங்கையிலே ஏற்படுகின்றது என்பதை உணர்ந்து மக்களுக்கான தீர்வு திட்டங்களையோ அல்லது மக்கள் சுதந்திரமாக வாழ கூடிய நிலமையையோ ஏற்படுத்தி தரவேண்டும் என தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகலில் இலங்கை அரசாங்கத்தின் கோரமுகம் அம்பலம். ரவிகரன் தெரிவிப்பு. samugammedia நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலில் இலங்கை அரசாங்கத்தின் கோரமுகம் வெளிப்படுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா குருந்தூர் மலையில் கட்டப்பட்ட சட்டவிரோத பௌத்த விகாரை வழக்கின் கட்டளைகளை தொடர்ந்து கிடைக்கப்பெற்ற நெருக்கடிகள், உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாக தனது பொறுப்புக்கள், பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்  ரவிகரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,நீதிபதி சரவணராஜா அவர்களின் பதவி விலகலில் இலங்கை அரசாங்கத்தின் கோரமுகம் வெளிப்படுகின்றது. நீதிபதிக்கே இந் நிலமை என்றால் சாதாரண தமிழ் மக்கள் எவ்வளவு கொடூரமான அரசின் கீழ் , கொடூரமான அரசாங்கத்தை நடாத்திக்கொண்டிருக்கும் இனவாதிகளின் கீழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இந்த விடயத்திலே நீதியின்பால் அவருக்கு கொடுக்கப்பட்ட மன அழுத்தங்கள் , உயிர் அச்சுறுத்தல்கள் ஊடகங்கள் மூலம் வெளிவந்திருக்கின்றது. இப்படியான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் கவனத்தில் எடுத்து தமிழ் மக்களுக்கு இப்படியான நெருக்கடிகள் இலங்கையிலே ஏற்படுகின்றது என்பதை உணர்ந்து மக்களுக்கான தீர்வு திட்டங்களையோ அல்லது மக்கள் சுதந்திரமாக வாழ கூடிய நிலமையையோ ஏற்படுத்தி தரவேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement