• Feb 26 2025

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களுக்கு வீட்டுத் திட்டம் கையளிப்பு!

Thansita / Feb 25th 2025, 9:36 pm
image

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பிய திருகோணமலை மாவட்ட பயனாளர்களுக்கான வீட்டுத்திட்டம் இன்று(25) கையளிக்கப்பட்டது.

நிலைபேறான மீள்குடியேற்றத்திற்கும் மீள் ஒருங்கிணைவுக்குமான விரிவாக்கப்பட்ட ஆதரவுத் திட்டத்தின் ஊடாக, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கன்னியா பிரதேசத்தில் இந்தத் திட்டம் திறந்து வைக்கப்பட்டது. 

இதனை, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபுள்யு. ஜி. எம். ஹேமந்த குமார மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் நோர்வே அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் இவ்வீடுகள் முழுமையாக திருத்தம் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது 

பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திலிருந்து 16 பயனாளிகளுக்கும், குச்சவெளி பிரதேச செயலகத்திலிருந்து 17 பயனாளிகளுக்கும், மொறவெவ பிரதேச செயலகத்திலிருந்து 07 பயனாளிகளுக்கும் மொத்தமாக 40 பயனாளிகளுக்கும் இவ் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது.

இதன்போது பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் நா. மதிவண்ணன், UNDP நிறுவனத்தின் திட்ட நிபுணர், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.


இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களுக்கு வீட்டுத் திட்டம் கையளிப்பு இந்தியாவிலிருந்து மீளத் திரும்பிய திருகோணமலை மாவட்ட பயனாளர்களுக்கான வீட்டுத்திட்டம் இன்று(25) கையளிக்கப்பட்டது.நிலைபேறான மீள்குடியேற்றத்திற்கும் மீள் ஒருங்கிணைவுக்குமான விரிவாக்கப்பட்ட ஆதரவுத் திட்டத்தின் ஊடாக, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கன்னியா பிரதேசத்தில் இந்தத் திட்டம் திறந்து வைக்கப்பட்டது. இதனை, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபுள்யு. ஜி. எம். ஹேமந்த குமார மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் நோர்வே அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் இவ்வீடுகள் முழுமையாக திருத்தம் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திலிருந்து 16 பயனாளிகளுக்கும், குச்சவெளி பிரதேச செயலகத்திலிருந்து 17 பயனாளிகளுக்கும், மொறவெவ பிரதேச செயலகத்திலிருந்து 07 பயனாளிகளுக்கும் மொத்தமாக 40 பயனாளிகளுக்கும் இவ் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது.இதன்போது பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் நா. மதிவண்ணன், UNDP நிறுவனத்தின் திட்ட நிபுணர், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement