• Apr 26 2024

நினைவாற்றல் குறைவை எப்படி தடுக்கலாம்?

Tamil nila / Jan 27th 2023, 8:49 pm
image

Advertisement

நினைவாற்றல் என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு அடிப்படைச் செயல்பாடாகும். சிறுவயதில் எமக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்கும்.  நாளடைவில் வயதாகும்போது நினைவாற்றல் குறைகிறது. இது காலப்போக்கில் டிமென்சியா என்ற அபாயத்தை ஏற்படுத்தும் 



நினைவகப் பாதையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் விளைவை மதிப்பிடுவதற்கு முந்தைய ஆராய்ச்சியின் சான்றுகள் போதுமானதாக இல்லை. ஆனால் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆய்வின் அடிப்படையில் நினைவாற்றலை அதிகரிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இதன்படி நன்றாக சாப்பிடுதல், தவறாமல் உடற்பயிற்சி செய்தல், சீட்டு விளையாடுதல் மற்றும் வாரத்திற்கு இரண்டு முறையாவது நண்பர்களுடைன் இணைந்து செயற்படுதல் உள்ளிட்ட விடயங்கள் நினைவாற்றலை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




நினைவாற்றல் குறித்து கடந்த 10 ஆண்டுகளாக சீனாவில் ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் 29 ஆயிரம் வயதானவர்களினுடைய நினைவாற்றல் பரிசோதிக்கப்பட்டது. 


இதன்படி ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, சமூக தொடர்புகள், அறிவாற்றல் செயற்பாடு, புகைப்பிடிக்காதவர்களின் நினைவாற்றல் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 


ஆரோக்கியமான உணவுகள் எனும்போது பழங்கள், காய்கறிகள். மீன், இறைச்சி, பால், உப்பு, எண்ணெய், முட்டை, தானியங்கள், பருப்பு வகைகள், உள்ளிட்ட 12 உணவுகளில் குறைந்தது 7 உணவுகளையாவது உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 


வாரத்திற்கு இரண்டு முறையாவது படித்தல், விளையாட்டுகள் உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும் எனவும் மது அருந்துதல், புகைப்பிடித்தல் உள்ளிட்ட பழக்கங்களை கைவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அதேபோல் வாரத்தில் ஒரு முறையாவது நண்பர்களுடன் நேரத்தை செலவிடுதல், கேளிக்கை கொண்டாடங்களில் கலந்துகொள்ளுதல் உள்ளிட்ட பழக்கவழக்கங்கள் நினைவாற்றலை அதிகரிக்க செய்யும் எனக்கூறப்படுகிறது. 


நினைவாற்றல் குறைவை எப்படி தடுக்கலாம் நினைவாற்றல் என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு அடிப்படைச் செயல்பாடாகும். சிறுவயதில் எமக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்கும்.  நாளடைவில் வயதாகும்போது நினைவாற்றல் குறைகிறது. இது காலப்போக்கில் டிமென்சியா என்ற அபாயத்தை ஏற்படுத்தும் நினைவகப் பாதையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் விளைவை மதிப்பிடுவதற்கு முந்தைய ஆராய்ச்சியின் சான்றுகள் போதுமானதாக இல்லை. ஆனால் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆய்வின் அடிப்படையில் நினைவாற்றலை அதிகரிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி நன்றாக சாப்பிடுதல், தவறாமல் உடற்பயிற்சி செய்தல், சீட்டு விளையாடுதல் மற்றும் வாரத்திற்கு இரண்டு முறையாவது நண்பர்களுடைன் இணைந்து செயற்படுதல் உள்ளிட்ட விடயங்கள் நினைவாற்றலை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவாற்றல் குறித்து கடந்த 10 ஆண்டுகளாக சீனாவில் ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் 29 ஆயிரம் வயதானவர்களினுடைய நினைவாற்றல் பரிசோதிக்கப்பட்டது. இதன்படி ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, சமூக தொடர்புகள், அறிவாற்றல் செயற்பாடு, புகைப்பிடிக்காதவர்களின் நினைவாற்றல் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவுகள் எனும்போது பழங்கள், காய்கறிகள். மீன், இறைச்சி, பால், உப்பு, எண்ணெய், முட்டை, தானியங்கள், பருப்பு வகைகள், உள்ளிட்ட 12 உணவுகளில் குறைந்தது 7 உணவுகளையாவது உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வாரத்திற்கு இரண்டு முறையாவது படித்தல், விளையாட்டுகள் உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும் எனவும் மது அருந்துதல், புகைப்பிடித்தல் உள்ளிட்ட பழக்கங்களை கைவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாரத்தில் ஒரு முறையாவது நண்பர்களுடன் நேரத்தை செலவிடுதல், கேளிக்கை கொண்டாடங்களில் கலந்துகொள்ளுதல் உள்ளிட்ட பழக்கவழக்கங்கள் நினைவாற்றலை அதிகரிக்க செய்யும் எனக்கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement