• May 05 2024

பிரிக்ஸ் கூட்டணியில் இலங்கை..! சீன அமைச்சரிடம் மனோ எம்.பி. கோரிக்கை!

Chithra / Apr 25th 2024, 1:44 pm
image

Advertisement

  

பிரிக்ஸ் கூட்டணியில் இலங்கையை இணைப்பதற்கு சீன அரசு உதவவேண்டுமென சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சரான சன் ஹையானிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்கும் இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினரும், துணை அமைச்சருமான  சன் ஹையானுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே மனோ கணேசன் குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த மனோ கணேசன்,

இன்று உலக பொருளாதாரம் ஆசியாவை மையமாக கொண்டுள்ளது. இங்கே சீனா தலைமை பாத்திரம் வகிக்கின்றது. இதற்கு மேலதிகமாக, சீனா, இந்தியா, ரஷ்யா, தென்னாபிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளின் ‘பீரிக்ஸ்’ என்ற கூட்டமைப்பு உருவாகி உள்ளது.

இந்த பிரபல பிரிக்ஸ் கூட்டமைப்பில்  இலங்கையும் எதிர்காலத்தில் இடம்பெற சீனா உதவிட வேண்டும் இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக பிரதி தலைவர் திகாம்பரம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.


பிரிக்ஸ் கூட்டணியில் இலங்கை. சீன அமைச்சரிடம் மனோ எம்.பி. கோரிக்கை   பிரிக்ஸ் கூட்டணியில் இலங்கையை இணைப்பதற்கு சீன அரசு உதவவேண்டுமென சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சரான சன் ஹையானிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகொள் விடுத்துள்ளார்.எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்கும் இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினரும், துணை அமைச்சருமான  சன் ஹையானுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே மனோ கணேசன் குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.இதன் போது கருத்துத் தெரிவித்த மனோ கணேசன்,இன்று உலக பொருளாதாரம் ஆசியாவை மையமாக கொண்டுள்ளது. இங்கே சீனா தலைமை பாத்திரம் வகிக்கின்றது. இதற்கு மேலதிகமாக, சீனா, இந்தியா, ரஷ்யா, தென்னாபிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளின் ‘பீரிக்ஸ்’ என்ற கூட்டமைப்பு உருவாகி உள்ளது.இந்த பிரபல பிரிக்ஸ் கூட்டமைப்பில்  இலங்கையும் எதிர்காலத்தில் இடம்பெற சீனா உதவிட வேண்டும் இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இச்சந்திப்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக பிரதி தலைவர் திகாம்பரம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement