• May 17 2024

'ஜீவ ஊற்று அன்பின் கரம்' அமைப்பின் மனிதாபிமான உதவிகள்!

Chithra / Jan 4th 2023, 5:01 pm
image

Advertisement

புதுவருட தினத்தை முன்னிட்டு  "ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் உதவித்திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கு தேவையான பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. 

அமைப்பின் விசேட செயற்திட்டத்தில் ஒன்றாக, நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து வழங்கி வருகின்றது.

அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.01.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 84 ஆவது இல்லமும், அதேவேளை SQM JANITORIAL SERVICES INC AND SQM FOUNDATION CANADA இனது 13 ஆவது இல்லமும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது, 

இவ் இல்லமானது, மட்டக்களப்பு - மைலம்பாவெளி கிராமத்தில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வந்த குடும்பத்தினருக்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை கமலநாதன் பாக்கியராஜா (SQM Founder) வழங்கியுள்ளார்.


மேலும், மட்டக்களப்பு - திராய்மடு கிராமத்தில்  வறுமைக்கோட்டுக்குட்பட்ட 20 குடும்பங்களுக்கு 'ஜீவ ஊற்று அன்பின் கரம்' அமைப்பின் மூலம் அன்றைய தினம் தலா 3000 ரூபா பெறுமதியுடைய உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

இப் பணிக்கான நிதி உதவியை குவைத்தில் வாழ்கின்ற ABDUI KAREEM SHERIF KAHN குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.


அத்துடன் வவுனியா மாவட்டத்தில் புளியங்குளம் பகுதியில்  வறுமைக்கோட்டுக்குட்பட்ட 21 குடும்பத்தினருக்கு தலா 3000 ரூபா பெறுமதியுடைய உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. 

இப் பணிக்கான நிதி உதவியை நெதர்லாந்து தேசத்தில் உள்ள சுவிஷேச தரிசன திருச்சபையினர்    வழங்கியிருந்தனர்.


மேலும் ஜீவ ஊற்று அன்பின் கரமும் open Door Ministry திருச்சபையினரும் (நெதர்லாந்து) இணைந்து 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபா பெறுமதியில் 230 மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைத்துள்ளனர்.

இவற்றில் open Door Ministry திருச்சபையினர்  யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள 150 மாணவர்களுக்கும் ஜீவ ஊற்று அன்பின் அமைப்பின் கரம் அமைப்பினர் வவுனியா, அம்பாறை மாவட்டங்களில் உள்ள 80 மாணவர்களுக்கும் வழங்கியுள்ளனர்.


'ஜீவ ஊற்று அன்பின் கரம்' அமைப்பின் மனிதாபிமான உதவிகள் புதுவருட தினத்தை முன்னிட்டு  "ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் உதவித்திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கு தேவையான பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. அமைப்பின் விசேட செயற்திட்டத்தில் ஒன்றாக, நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து வழங்கி வருகின்றது.அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.01.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 84 ஆவது இல்லமும், அதேவேளை SQM JANITORIAL SERVICES INC AND SQM FOUNDATION CANADA இனது 13 ஆவது இல்லமும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது, இவ் இல்லமானது, மட்டக்களப்பு - மைலம்பாவெளி கிராமத்தில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வந்த குடும்பத்தினருக்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை கமலநாதன் பாக்கியராஜா (SQM Founder) வழங்கியுள்ளார்.மேலும், மட்டக்களப்பு - திராய்மடு கிராமத்தில்  வறுமைக்கோட்டுக்குட்பட்ட 20 குடும்பங்களுக்கு 'ஜீவ ஊற்று அன்பின் கரம்' அமைப்பின் மூலம் அன்றைய தினம் தலா 3000 ரூபா பெறுமதியுடைய உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இப் பணிக்கான நிதி உதவியை குவைத்தில் வாழ்கின்ற ABDUI KAREEM SHERIF KAHN குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.அத்துடன் வவுனியா மாவட்டத்தில் புளியங்குளம் பகுதியில்  வறுமைக்கோட்டுக்குட்பட்ட 21 குடும்பத்தினருக்கு தலா 3000 ரூபா பெறுமதியுடைய உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இப் பணிக்கான நிதி உதவியை நெதர்லாந்து தேசத்தில் உள்ள சுவிஷேச தரிசன திருச்சபையினர்    வழங்கியிருந்தனர்.மேலும் ஜீவ ஊற்று அன்பின் கரமும் open Door Ministry திருச்சபையினரும் (நெதர்லாந்து) இணைந்து 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபா பெறுமதியில் 230 மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைத்துள்ளனர்.இவற்றில் open Door Ministry திருச்சபையினர்  யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள 150 மாணவர்களுக்கும் ஜீவ ஊற்று அன்பின் அமைப்பின் கரம் அமைப்பினர் வவுனியா, அம்பாறை மாவட்டங்களில் உள்ள 80 மாணவர்களுக்கும் வழங்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement