• Jan 08 2025

ஹட்டன் பஸ் விபத்து - மூவர் பலி : 7 பேர் கண்டி வைத்தியசாலையசாலைக்கு மாற்றம்

Tharmini / Dec 22nd 2024, 2:04 pm
image

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று ஹட்டன் மல்லியப்பு பகுதியில் (21) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்தவர்களில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் கண்டி புறநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் உவைஸ் (68), ஹட்டன் தோட்டப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ் தினேஷ்குமார் (14), நோர்வூட் மேற்பிரிவு பகுதியைச் சேர்ந்த முத்துராக்கு (67) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பஸ்ஸில் பயணித்த 53 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் காயமடைந்த 43 பேர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் டிக்கோயா ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விபத்தில் படுகாயமடைந்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பஸ்ஸின் சாரதி ஹட்டன் பொலிஸாரின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஹட்டன் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

பஸ் சாரதி தனது கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டே பஸ்ஸை ஓட்டிச் சென்றதாகவும், அதனாலேயே பஸ் சாரதிக்கு பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளான பஸ்ஸில் அனுமதிக்கப்பட்ட ஆசனங்களை விட சில ஆசனங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக ஹட்டன் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதுடன், விபத்துக்குள்ளான பஸ்ஸின் பாதுகாப்பு கமராவின் காட்சிகளை பொலிஸார் ஆராய்ந்துள்ளனர்.

குறித்த தரவுகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், விபத்துக்குள்ளான பஸ் நேற்று (21) இரவு ஹட்டன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த 14 வயதுடைய சிறுவன் சிறுநீரக நோயாளர் என்பதுடன், மாதாந்த சிகிச்சை பெறுவதற்காக தனது சகோதரியுடன் கண்டிக்கு சென்றிருந்த போதே இவ்விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சகோதரியும் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மற்றும் மத்திய மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் இணைந்து வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான செயலமர்வு அண்மையில் ஹட்டன் பிரதேசத்தில் நடாத்தப்பட்டது.

ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர அவர்களின் மேற்பார்வையில் ஹட்டன் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தலைமையில் ஹட்டன் வாகன பிரிவு அதிகாரிகள் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 






ஹட்டன் பஸ் விபத்து - மூவர் பலி : 7 பேர் கண்டி வைத்தியசாலையசாலைக்கு மாற்றம் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று ஹட்டன் மல்லியப்பு பகுதியில் (21) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்தவர்களில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் கண்டி புறநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் உவைஸ் (68), ஹட்டன் தோட்டப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ் தினேஷ்குமார் (14), நோர்வூட் மேற்பிரிவு பகுதியைச் சேர்ந்த முத்துராக்கு (67) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பஸ்ஸில் பயணித்த 53 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் காயமடைந்த 43 பேர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் டிக்கோயா ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.விபத்தில் படுகாயமடைந்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பஸ்ஸின் சாரதி ஹட்டன் பொலிஸாரின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஹட்டன் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.பஸ் சாரதி தனது கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டே பஸ்ஸை ஓட்டிச் சென்றதாகவும், அதனாலேயே பஸ் சாரதிக்கு பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.விபத்துக்குள்ளான பஸ்ஸில் அனுமதிக்கப்பட்ட ஆசனங்களை விட சில ஆசனங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக ஹட்டன் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதுடன், விபத்துக்குள்ளான பஸ்ஸின் பாதுகாப்பு கமராவின் காட்சிகளை பொலிஸார் ஆராய்ந்துள்ளனர்.குறித்த தரவுகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், விபத்துக்குள்ளான பஸ் நேற்று (21) இரவு ஹட்டன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.விபத்தில் உயிரிழந்த 14 வயதுடைய சிறுவன் சிறுநீரக நோயாளர் என்பதுடன், மாதாந்த சிகிச்சை பெறுவதற்காக தனது சகோதரியுடன் கண்டிக்கு சென்றிருந்த போதே இவ்விபத்துக்குள்ளாகியுள்ளார்.விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சகோதரியும் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மற்றும் மத்திய மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் இணைந்து வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான செயலமர்வு அண்மையில் ஹட்டன் பிரதேசத்தில் நடாத்தப்பட்டது.ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர அவர்களின் மேற்பார்வையில் ஹட்டன் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தலைமையில் ஹட்டன் வாகன பிரிவு அதிகாரிகள் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement