• May 02 2024

இராகுகாலம் என்பதால் இப்போது பொன்னாவெளிக்கு செல்லவில்லை...! அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு...!

Sharmi / Apr 19th 2024, 3:55 pm
image

Advertisement

இராகுகாலம் என்பதால் பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலைக்கு செல்லவில்லை என கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் பொன்னாவெளி சம்பவம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பொன்னாவெளிக்கு நான் செல்லவில்லை. பொருத்தமான நேரம் பார்த்து செல்ல வேண்டும். இப்பொழுது ராகு காலம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

கடும் வறட்சியான காலநிலை காணப்படுவதால் அதிக நீர் ஆவியாகின்றது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் சிறுதாணிய செய்கை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம்.

நெற்செய்கைக்கு அதிக நீர் தேவைப்படுகின்றது. இதனால் அதிகளவிலான நீர் ஆவியாகி வீணாகின்றது. அதனை தவிர்க்கும் வகையில் 1000 ஏக்கரில் சிறுதாணிய செய்கையை மேற்கொள்வது தொடர்பில் முதல் கட்டமாக ஆராய்ந்திருந்தோம். அதற்கு சாதகமான சூழல் காணப்படுகின்றது.

அதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது.

அது தவிர கிளிநொச்சி சேவைச் சந்தையின் குறைபாடுகள், பூநகரி பிரதேச சபை ஊடாக மணல் விற்பனை நிலையம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

கிடைக்கும் மணல் வளம் நியாயமில்லாமல் மக்களிற்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றது அதனை கட்டுப்படுத்தவே இவ்வாறு  நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.


இராகுகாலம் என்பதால் இப்போது பொன்னாவெளிக்கு செல்லவில்லை. அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு. இராகுகாலம் என்பதால் பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலைக்கு செல்லவில்லை என கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் பொன்னாவெளி சம்பவம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.பொன்னாவெளிக்கு நான் செல்லவில்லை. பொருத்தமான நேரம் பார்த்து செல்ல வேண்டும். இப்பொழுது ராகு காலம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,கடும் வறட்சியான காலநிலை காணப்படுவதால் அதிக நீர் ஆவியாகின்றது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் சிறுதாணிய செய்கை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம்.நெற்செய்கைக்கு அதிக நீர் தேவைப்படுகின்றது. இதனால் அதிகளவிலான நீர் ஆவியாகி வீணாகின்றது. அதனை தவிர்க்கும் வகையில் 1000 ஏக்கரில் சிறுதாணிய செய்கையை மேற்கொள்வது தொடர்பில் முதல் கட்டமாக ஆராய்ந்திருந்தோம். அதற்கு சாதகமான சூழல் காணப்படுகின்றது.அதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது. அது தவிர கிளிநொச்சி சேவைச் சந்தையின் குறைபாடுகள், பூநகரி பிரதேச சபை ஊடாக மணல் விற்பனை நிலையம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கிடைக்கும் மணல் வளம் நியாயமில்லாமல் மக்களிற்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றது அதனை கட்டுப்படுத்தவே இவ்வாறு  நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement