• Sep 17 2024

"பிரித்தானியாவை வெறுக்கிறேன்; இலங்கை செல்ல விரும்புகிறேன்"! - நீதிமன்றில் கூச்சலிட்ட இலங்கையர்

Chithra / Feb 9th 2023, 12:18 pm
image

Advertisement

கடந்த ஆண்டு குதிரை காவலர் அணிவகுப்பின் போது ஆயுதமேந்திய அதிகாரிகளை நோக்கி சென்றதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கையர் நேற்று நீதிமன்றில் கூச்சலிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் டெய்லி மெய்ல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவை நான் வெறுக்கிறேன். 'நான் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்புகிறேன்' என்று கூச்சலிட்டார்.

இதனையடுத்து அவர் உடனடியாகவே வெளியேற்றப்பட்டதாக டெய்லி மெய்ல் தெரிவித்துள்ளது.

30 வயதான பிரசாந்த் கந்தையா என்று இந்த இலங்கையர், கடந்த ஆண்டு ஏப்ரல் 18ஆம் திகதியன்று செயின்ட் ஜேம்ஸ் பூங்காவில் குதிரைப்படையினரின் அணிவகுப்பு நடைபெற்ற வேளையில் கத்தி ஒன்றுடன் காவலர்களை நோக்கி ஓடியதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டார்.

எனினும் தற்கொலை செய்துக்கொள்ளும் நோக்கத்தில் இருந்த அவர், தம்மை காவலர்கள் சுட்டுக்கொல்லவேண்டும் என்பதற்காகவே, அவர்களை நோக்கி ஓடியதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து அவரை அறங்கூறுனர்கள் விடுதலை செய்ய பரிந்துரைத்தனர்.

இருப்பினும் திடீரென்று அவர் நீதிமன்றத்தில் கூச்சலிட்டார். தாம் பிரித்தானியை வெறுப்பதாகவும் இலங்கைக்கு திரும்பிச்செல்ல விரும்புவதாகவும் அவர் சத்தமிட்டார்.

இந்தநிலையில் நீதிமன்றில் கூச்சலிட்டமைக்காக சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் நாளை அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


"பிரித்தானியாவை வெறுக்கிறேன்; இலங்கை செல்ல விரும்புகிறேன்" - நீதிமன்றில் கூச்சலிட்ட இலங்கையர் கடந்த ஆண்டு குதிரை காவலர் அணிவகுப்பின் போது ஆயுதமேந்திய அதிகாரிகளை நோக்கி சென்றதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கையர் நேற்று நீதிமன்றில் கூச்சலிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தின் டெய்லி மெய்ல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.பிரித்தானியாவை நான் வெறுக்கிறேன். 'நான் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்புகிறேன்' என்று கூச்சலிட்டார்.இதனையடுத்து அவர் உடனடியாகவே வெளியேற்றப்பட்டதாக டெய்லி மெய்ல் தெரிவித்துள்ளது.30 வயதான பிரசாந்த் கந்தையா என்று இந்த இலங்கையர், கடந்த ஆண்டு ஏப்ரல் 18ஆம் திகதியன்று செயின்ட் ஜேம்ஸ் பூங்காவில் குதிரைப்படையினரின் அணிவகுப்பு நடைபெற்ற வேளையில் கத்தி ஒன்றுடன் காவலர்களை நோக்கி ஓடியதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டார்.எனினும் தற்கொலை செய்துக்கொள்ளும் நோக்கத்தில் இருந்த அவர், தம்மை காவலர்கள் சுட்டுக்கொல்லவேண்டும் என்பதற்காகவே, அவர்களை நோக்கி ஓடியதாக நீதிமன்றில் தெரிவித்தார்.இதனையடுத்து அவரை அறங்கூறுனர்கள் விடுதலை செய்ய பரிந்துரைத்தனர்.இருப்பினும் திடீரென்று அவர் நீதிமன்றத்தில் கூச்சலிட்டார். தாம் பிரித்தானியை வெறுப்பதாகவும் இலங்கைக்கு திரும்பிச்செல்ல விரும்புவதாகவும் அவர் சத்தமிட்டார்.இந்தநிலையில் நீதிமன்றில் கூச்சலிட்டமைக்காக சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் நாளை அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement