• May 19 2024

கடவுளை பார்த்துவிட்டேன்...பிரபல இயக்குநரைப் பார்த்து நெகிழ்ந்த ராஜமௌலி

keerthana / Jan 14th 2023, 7:11 pm
image

Advertisement

தமிழ்,தெலுங்கு, இந்தி,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி பான் இந்தியத் திரைப்படமாக வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஆர்.ஆர்.ஆர்.ராம் சரண்,ஜூனியர் என்டிஆர், அஜய் தேவன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் ஆகியோரது நடிப்பில் வெளியாகிய இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

இப்படத்தினை இயக்குநர் ராஜமௌலி இயக்கியிருந்தார். இவர் இதற்கு முதல் மாவீரன் பாகுபலி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.இவரது இயக்கத்தில் இறுதியாகவே ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகியிருந்தது.சுதந்திரத்துக்காகப் போராடிய இரண்டு நண்பர்களைப் பற்றிய கதையாகவே இப்படம் அமைந்திருந்தது.


இப்படத்தில் இடம் பெற்ற  நாட்டுக்குத்து பாடல் சிறந்த பாடல் பிரிவில் இந்தாண்டுக்கான கோல்டன் குளோப் விருது வென்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்த கோலாகல விழாவில், ஆர்.ஆர்.ஆர் நட்சத்திரங்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் கலந்து கொண்டனர். கோல்டன் குளோப் விருதை இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக்கொண்டார்.


இந்தநிலையில் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது  டுவிட்டர் பக்கத்தில், பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்து, "நான் கடவுளை சந்தித்தேன்" என தலைப்பிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த போட்டோவில், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கடவுளை பார்த்துவிட்டேன்.பிரபல இயக்குநரைப் பார்த்து நெகிழ்ந்த ராஜமௌலி தமிழ்,தெலுங்கு, இந்தி,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி பான் இந்தியத் திரைப்படமாக வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஆர்.ஆர்.ஆர்.ராம் சரண்,ஜூனியர் என்டிஆர், அஜய் தேவன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் ஆகியோரது நடிப்பில் வெளியாகிய இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.இப்படத்தினை இயக்குநர் ராஜமௌலி இயக்கியிருந்தார். இவர் இதற்கு முதல் மாவீரன் பாகுபலி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.இவரது இயக்கத்தில் இறுதியாகவே ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகியிருந்தது.சுதந்திரத்துக்காகப் போராடிய இரண்டு நண்பர்களைப் பற்றிய கதையாகவே இப்படம் அமைந்திருந்தது.இப்படத்தில் இடம் பெற்ற  நாட்டுக்குத்து பாடல் சிறந்த பாடல் பிரிவில் இந்தாண்டுக்கான கோல்டன் குளோப் விருது வென்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்த கோலாகல விழாவில், ஆர்.ஆர்.ஆர் நட்சத்திரங்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் கலந்து கொண்டனர். கோல்டன் குளோப் விருதை இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக்கொண்டார்.இந்தநிலையில் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது  டுவிட்டர் பக்கத்தில், பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்து, "நான் கடவுளை சந்தித்தேன்" என தலைப்பிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த போட்டோவில், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement