• May 18 2024

எங்கள் கடல் வளம் எமது மக்களுக்கே சொந்தம்...!சபையில் அமைச்சர் டக்ளஸ்...!samugammedia

Sharmi / Nov 23rd 2023, 7:51 am
image

Advertisement

எங்கள் கடல் வளம் எமது மக்களுக்கே சொந்தமென்று களத்தில் இறங்கி காரியம் ஆற்றியவன் நான் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்ட முன்மொழிவின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு யாரும் அரசில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியமில்லை. கடற்றொழில் அமைச்சராக வருவதற்கு முன்னரே எங்கள் கடல் வளம் எமது மக்களுக்கே சொந்தமென்று களத்தில் இறங்கி காரியம் ஆற்றியவன் நான்.

நாட்டை ஆழ்பவர்களே பாராளுமன்ற உறுப்பினர்கள்.  கூட்டுப்பொறுப்போடு உழைக்க முன் வாருங்கள் ,மக்கள் உங்களுக்கு வாக்களித்தது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே, மாறாக வீரப்பிரதாபம் பேசி விட்டு வெறும் பொம்மைகளாக குந்தியிருப்பதற்காக அல்ல, அல்லது ஊடகங்களுக்காக உரத்து கூச்சலிட்டுவிட்டு பாராளுமன்ற சலுகைகளை மட்டும் அனுபவித்துவிட்டு போவதற்காக அல்ல. 

தென்னிலங்களை அரசியல் சக்திகள் தாம் ஆளும் கட்சியாக வென்று மக்களுக்கு சேவையாற்றவே தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

ஆனாலும் சக தமிழ் தரப்பினர் பலரும் எதிர்ப்பரசியல் நடத்தி கொக்கரிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இத்தகைய சாபக்கேடுதான் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தீராப் பிரச்சினையாக நீடித்து வரவும் காரணமாக இருந்து வருகிறது.

'கொன்றால் பாவம், திண்றால் போச்சி' என்ற நிலைப்பாடு, இதர தமிழ்க் கட்சிகளுக்கு இருக்கலாம். ஆனால், நான் அந்த நிலைப்பாட்டில் இல்லை என்பதை அனைவரும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனது மக்கள் என்பதே எனது மூச்சு. அந்த வகையில் ஏழு எழுத்துக்களில் தான் எனது மூச்சு இருக்கின்றது. இது எனது மக்களுக்கானது. ஆங்கில மொழியிலே லக்கி செவன் என்பார்கள். அது எமது மக்களுக்கானது.

ஆனால், ஏனைய தமிழ்த் தேசியம் சப்புகின்ற சில அரசியல்வாதிகள் என்னைவிட எமது மக்களுக்கு அரைவாசி முன்னிலையிலேயே இருக்கின்றனர். அதாவது ஏழரைகளாக இருக்கின்றனர். அதனை மேலும் உறுதிப்படுத்துகின்ற வகையிலேயே அவர்களது செயற்பாடுகளும் இருந்து வருகின்றன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.



எங்கள் கடல் வளம் எமது மக்களுக்கே சொந்தம்.சபையில் அமைச்சர் டக்ளஸ்.samugammedia எங்கள் கடல் வளம் எமது மக்களுக்கே சொந்தமென்று களத்தில் இறங்கி காரியம் ஆற்றியவன் நான் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்ட முன்மொழிவின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு யாரும் அரசில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியமில்லை. கடற்றொழில் அமைச்சராக வருவதற்கு முன்னரே எங்கள் கடல் வளம் எமது மக்களுக்கே சொந்தமென்று களத்தில் இறங்கி காரியம் ஆற்றியவன் நான்.நாட்டை ஆழ்பவர்களே பாராளுமன்ற உறுப்பினர்கள்.  கூட்டுப்பொறுப்போடு உழைக்க முன் வாருங்கள் ,மக்கள் உங்களுக்கு வாக்களித்தது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே, மாறாக வீரப்பிரதாபம் பேசி விட்டு வெறும் பொம்மைகளாக குந்தியிருப்பதற்காக அல்ல, அல்லது ஊடகங்களுக்காக உரத்து கூச்சலிட்டுவிட்டு பாராளுமன்ற சலுகைகளை மட்டும் அனுபவித்துவிட்டு போவதற்காக அல்ல. தென்னிலங்களை அரசியல் சக்திகள் தாம் ஆளும் கட்சியாக வென்று மக்களுக்கு சேவையாற்றவே தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.ஆனாலும் சக தமிழ் தரப்பினர் பலரும் எதிர்ப்பரசியல் நடத்தி கொக்கரிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இத்தகைய சாபக்கேடுதான் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தீராப் பிரச்சினையாக நீடித்து வரவும் காரணமாக இருந்து வருகிறது.'கொன்றால் பாவம், திண்றால் போச்சி' என்ற நிலைப்பாடு, இதர தமிழ்க் கட்சிகளுக்கு இருக்கலாம். ஆனால், நான் அந்த நிலைப்பாட்டில் இல்லை என்பதை அனைவரும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.எனது மக்கள் என்பதே எனது மூச்சு. அந்த வகையில் ஏழு எழுத்துக்களில் தான் எனது மூச்சு இருக்கின்றது. இது எனது மக்களுக்கானது. ஆங்கில மொழியிலே லக்கி செவன் என்பார்கள். அது எமது மக்களுக்கானது.ஆனால், ஏனைய தமிழ்த் தேசியம் சப்புகின்ற சில அரசியல்வாதிகள் என்னைவிட எமது மக்களுக்கு அரைவாசி முன்னிலையிலேயே இருக்கின்றனர். அதாவது ஏழரைகளாக இருக்கின்றனர். அதனை மேலும் உறுதிப்படுத்துகின்ற வகையிலேயே அவர்களது செயற்பாடுகளும் இருந்து வருகின்றன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement