ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வெற்றிக்காக நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவேன். எம் மீதான மக்கள் நம்பிக்கை இன்றும் உறுதியாக உள்ளது. நிச்சயம் வெற்றிப் பெறுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
களனி ரஜமஹா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேர்தல் என்பது சவால்மிக்கது. அனைத்து தரப்பினரும் வெற்றி பெறவே முயற்சிப்பார்கள்.ஆகவே இந்த தேர்தல் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு சவாலானது.
எம்மை விட்டு விலகிச் சென்றவர்கள் பற்றி பேசி இனி பயனில்லை.செல்பவர்களை பலவந்தமாக தக்கவைத்துக் கொள்ள முடியாது. பலவந்தமாகவும் வெளியேற்றவும் முடியாது. இருப்பவர்களை கொண்டே முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
தேர்தல் காலத்தில் எம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தேர்தல் கால பிரச்சாரமாக காணப்படுகிறது.
சேறு பூசுவதை விடுத்து கொள்கைகயை முன்னிலைப்படுத்தி செயற்படுமாறு அரசியல் தரப்பினர்களிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கன்னி பிரச்சாரக் கூட்டம் நாளை அநுதாரபுரம் நகரில் இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரங்களை நடத்த தீர்மானித்துள்ளது.
நாமலுக்காக நாடு முழுவதும் பிரச்சார கூட்டங்களை நடத்துவேன். - மஹிந்த ராஜபக்ஷ அதிரடி ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வெற்றிக்காக நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவேன். எம் மீதான மக்கள் நம்பிக்கை இன்றும் உறுதியாக உள்ளது. நிச்சயம் வெற்றிப் பெறுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். களனி ரஜமஹா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேர்தல் என்பது சவால்மிக்கது. அனைத்து தரப்பினரும் வெற்றி பெறவே முயற்சிப்பார்கள்.ஆகவே இந்த தேர்தல் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு சவாலானது. எம்மை விட்டு விலகிச் சென்றவர்கள் பற்றி பேசி இனி பயனில்லை.செல்பவர்களை பலவந்தமாக தக்கவைத்துக் கொள்ள முடியாது. பலவந்தமாகவும் வெளியேற்றவும் முடியாது. இருப்பவர்களை கொண்டே முன்னோக்கிச் செல்ல வேண்டும். தேர்தல் காலத்தில் எம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தேர்தல் கால பிரச்சாரமாக காணப்படுகிறது. சேறு பூசுவதை விடுத்து கொள்கைகயை முன்னிலைப்படுத்தி செயற்படுமாறு அரசியல் தரப்பினர்களிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கன்னி பிரச்சாரக் கூட்டம் நாளை அநுதாரபுரம் நகரில் இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரங்களை நடத்த தீர்மானித்துள்ளது.