• May 19 2024

பிரதமர் மோடி மனசு வைத்தால் மகனை என்னிடம் சேர்க்க முடியும்..!சாந்தனின் தாயார் கண்ணீர்..!samugammedia

Sharmi / Jun 12th 2023, 1:49 pm
image

Advertisement

மகனை மனச்சாட்சியின் அடிப்படையில் விடுதலை செய்தவர்கள் மீண்டும் மகன் தன்னுடன் வந்து சேர்வதற்கும் பிரதமர் மோடி உட்பட அனைத்து தலைவர்களும் வழிவகை செய்ய வேண்டும் எனவும், தனது கண் பார்வை கெட்டு போவதற்கு முன்னதாக மகனை பார்க்க வேண்டும் எனவும் சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.  



இன்றைய தினம் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

கார்த்திகை மாதம் 11 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட எனது மகன் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த போதிலும் இது வரையிலும் எந்த தொடர்பும் கிடைக்கவில்லை.

மகன் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளமையை பத்திரிக்கை வாயிலாக அறிந்து கொண்டேன். பிரதமர் மோடி எனக்கு மகன் போன்றவர். நான் அவரிற்கு தாய் போன்றவர். ஆகவே அவர் எனது மகனை என்னுடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகனை பார்த்து 32 வருடங்கள் ஆகின்றன. ஏற்கனவே எனது வலது கண் பார்க்க முடியாத நிலையில் உள்ளது. இடது கண்ணும் கெட்டு போவதற்கு முன்னர் மகனை பார்க்க வேண்டும்.

மனசாட்சிப்படி எவ்வாறு எனது மகனை விடுதலை செய்தீர்களோ அவ்வாறு அவரை என்னுடன் சேர்ப்பதற்கு வழி  செய்யுங்கள்.

மோடி ஐயா மனசு வைத்தால் எனது பிள்ளையை என்னுடன் சேர்க்க முடியும்.

எத்தனையோ தலைவர்கள் போராட்டம் நடத்தி பெரும்பாடுபட்டே பிள்ளைக்கு விடுதலை வாங்கி கொடுத்தனர். அதே போன்று மகனை என்னுடன் சேர்த்தால்  உங்களிற்கு கோடான கோடி புண்ணியம் கிடைக்கும்.

நானும் இன்னும் கொஞ்ச நாட்களே உயிருடன் இருப்பன். எனக்கு இயலாமல் வந்து இங்கிருக்கும் 3 பிள்ளைகளும் ஏதோவெல்லாம் செய்து எனது உயிரை பிடித்து வைத்துள்ளனர். என்னால் கஷ்டப்படுகின்றனர். அங்கிருக்கும் பிள்ளையோ என்னைப் பார்க்க முடியாது தவிக்கின்றது.

பிள்ளை வர போவதாக எல்லா விதமான சாப்பாட்டு பொருட்களையும் வாங்கி வைத்தேன். அவை காலாவதியாகி விட்டன.

உங்களிற்கு அம்மா இருந்தால் சிந்தித்து பாருங்கள். அதை விட மோசமான நிலையிலே நான் உள்ளேன்.

32 வருடங்களாக பிள்ளையின் குரலை கேட்கவோ அல்லது முகத்தை பார்க்கவோ இல்லை. பிள்ளையும் அந்த நிலையிலே உள்ளது. பாவம் செய்த குடும்பமாகவும் வித்தியாசமாக தியாகம் செய்த குடும்பமாகவும்  நாம் உள்ளோம்.

பிள்ளை இங்கு வருகின்ற வேளையில்  ஒரு மாதமாவது நான் சமைத்து கொடுக்க வேண்டும்.

மகனின் குரலை கேட்பதற்கு ஆவது ஏதேனும் வழிவகை செய்து தாருங்கள். மகனை அலைஞ்சு திரிந்து பார்க்கும் அளவில் எனது உடல் நிலை இல்லை.

ஆகவே பிரதமர் மோடி எனது மகனை என்னிடம் சேர்ப்பதற்கு வழி செய்ய வேண்டும் என்பதை மன்றாட்டமாக கேட்டு கொள்வதாகவும் தெரிவித்தார்.


பிரதமர் மோடி மனசு வைத்தால் மகனை என்னிடம் சேர்க்க முடியும்.சாந்தனின் தாயார் கண்ணீர்.samugammedia மகனை மனச்சாட்சியின் அடிப்படையில் விடுதலை செய்தவர்கள் மீண்டும் மகன் தன்னுடன் வந்து சேர்வதற்கும் பிரதமர் மோடி உட்பட அனைத்து தலைவர்களும் வழிவகை செய்ய வேண்டும் எனவும், தனது கண் பார்வை கெட்டு போவதற்கு முன்னதாக மகனை பார்க்க வேண்டும் எனவும் சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.  இன்றைய தினம் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், கார்த்திகை மாதம் 11 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட எனது மகன் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த போதிலும் இது வரையிலும் எந்த தொடர்பும் கிடைக்கவில்லை. மகன் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளமையை பத்திரிக்கை வாயிலாக அறிந்து கொண்டேன். பிரதமர் மோடி எனக்கு மகன் போன்றவர். நான் அவரிற்கு தாய் போன்றவர். ஆகவே அவர் எனது மகனை என்னுடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மகனை பார்த்து 32 வருடங்கள் ஆகின்றன. ஏற்கனவே எனது வலது கண் பார்க்க முடியாத நிலையில் உள்ளது. இடது கண்ணும் கெட்டு போவதற்கு முன்னர் மகனை பார்க்க வேண்டும். மனசாட்சிப்படி எவ்வாறு எனது மகனை விடுதலை செய்தீர்களோ அவ்வாறு அவரை என்னுடன் சேர்ப்பதற்கு வழி  செய்யுங்கள்.மோடி ஐயா மனசு வைத்தால் எனது பிள்ளையை என்னுடன் சேர்க்க முடியும். எத்தனையோ தலைவர்கள் போராட்டம் நடத்தி பெரும்பாடுபட்டே பிள்ளைக்கு விடுதலை வாங்கி கொடுத்தனர். அதே போன்று மகனை என்னுடன் சேர்த்தால்  உங்களிற்கு கோடான கோடி புண்ணியம் கிடைக்கும். நானும் இன்னும் கொஞ்ச நாட்களே உயிருடன் இருப்பன். எனக்கு இயலாமல் வந்து இங்கிருக்கும் 3 பிள்ளைகளும் ஏதோவெல்லாம் செய்து எனது உயிரை பிடித்து வைத்துள்ளனர். என்னால் கஷ்டப்படுகின்றனர். அங்கிருக்கும் பிள்ளையோ என்னைப் பார்க்க முடியாது தவிக்கின்றது. பிள்ளை வர போவதாக எல்லா விதமான சாப்பாட்டு பொருட்களையும் வாங்கி வைத்தேன். அவை காலாவதியாகி விட்டன. உங்களிற்கு அம்மா இருந்தால் சிந்தித்து பாருங்கள். அதை விட மோசமான நிலையிலே நான் உள்ளேன். 32 வருடங்களாக பிள்ளையின் குரலை கேட்கவோ அல்லது முகத்தை பார்க்கவோ இல்லை. பிள்ளையும் அந்த நிலையிலே உள்ளது. பாவம் செய்த குடும்பமாகவும் வித்தியாசமாக தியாகம் செய்த குடும்பமாகவும்  நாம் உள்ளோம். பிள்ளை இங்கு வருகின்ற வேளையில்  ஒரு மாதமாவது நான் சமைத்து கொடுக்க வேண்டும். மகனின் குரலை கேட்பதற்கு ஆவது ஏதேனும் வழிவகை செய்து தாருங்கள். மகனை அலைஞ்சு திரிந்து பார்க்கும் அளவில் எனது உடல் நிலை இல்லை. ஆகவே பிரதமர் மோடி எனது மகனை என்னிடம் சேர்ப்பதற்கு வழி செய்ய வேண்டும் என்பதை மன்றாட்டமாக கேட்டு கொள்வதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement