• May 06 2024

போதை பொருள் கடத்தலின் மையமாகியுள்ள மன்னார்..! தடுப்பது யார்...? samugammedia

Chithra / Jun 12th 2023, 1:47 pm
image

Advertisement

ஜோசப் நயன்

இலங்கையின் வட பகுதிகளில் அண்மைகாலமாக போதை பொருள் பயன்பாடு மற்றும் போதை பொருள் பாவனையோடு தொடர்புபட்ட குற்ற செயல்கள் சடுதியாக அதிகரித்துள்ளமை அண்மைகால தரவுகளின் அடிப்படையில் அறிய முடிகின்றது.

மன்னாரில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவனிடம் இருந்து 4 கிலோ 700 கிராம் கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த மாணவனும் கைது செய்யப்பட்டிருந்தான்.

இவ்வாறு - வடபகுதியில் பாடசாலை மாணவர்கள் போதை பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமையும் அதே நேரம் அதிகரித்த போதை பொருள் பாவனை காரணமாக மரணமடைந்த மற்றும், தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் தொடர்பிலும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.  

இந்த நிலையில் இலங்கையின் கேரள கஞ்சா களஞ்சியம் என வர்ணிக்கப்படும் அளவுக்கு வடக்கு கடல் பகுதியூடாக நாட்டுக்குள் கொண்டுவரப்படும் போதை பொருட்களின் தொகை பாரிய அளவு அதிகரித்திருக்கின்றது.

கடந்த வருடம் தூத்துக்குடி அருகே முள்ளகாடு கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கை வழியாக வளைகுடா நாட்டிற்கு கடத்த இருந்த  15 கோடி ரூபாய்  மதிப்பிலான 5 பாக்கெட்டுகளில் தடை செய்யப்பட்ட  ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது.


பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அடுத்தடுத்து கஞ்சா மூட்டைகள் கரை ஒதுங்குவது குறித்து இந்திய உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில் தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி சென்ற போது  நடுக்கடலில் படகு மூழ்கியதில்  படகில்  இருந்த கஞ்சா மூட்டைகள் கடலில் விழுந்து கரை ஒதுங்கியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியிருந்தது இவ்வாறு 15 நாட்களில் தமிழக கடலோர பகுதிகளில் சுமார் 800 கிலோவுக்கு அதிகமான கஞ்சா கரை  ஒதுங்கியிருந்தது.

இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு மரத்தடிகளை ஏற்றி சென்ற கப்பலில் உள்ள  சரக்கு பெட்டகம் ஒன்றில் இருந்து 9 கருப்பு நிற பேக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1000 கோடி பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் இந்திய  மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அசிஸ் என சொல்லப்படும் 97 கிலோ ஆபத்தான போதை பொருளுடன் இந்திய பிரஜைகள் மூவர் இலங்கையில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வருடம் இந்திய ஊடகங்கள் ஊடாக இலங்கையுடன் தொடர்புபட்டு சில கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் மேற்படி செய்திகளை வெளியிட்டிருந்தன.


குறிப்பாக வடபகுதியில்  கடலோர மாவட்டங்களான மன்னார், யாழ்பாணம் மாவட்டங்கள் ஊடாகவே இந்தியாவில் இருந்து அதிகளவு கடல் வழி போதை வர்த்தகங்கள் இடம் பெற்று வருகின்றமை அண்மைகாலமாக இடம் பெறும் போதை பொருள் கைது நடவடிக்கைகளில் அறிய முடிகின்றது.

இவ்வாறான நிலையில் மன்னார் மாவட்டத்தில் கடந்த ஆறு வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 600 மில்லியன் ரூபா பெறுமதியான “கேரள கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதை பொருட்கள்” மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் வழங்கிய தகவல் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் நாட்டில் கொரோனா கட்டுப்படுகள்,பொருளாதார நெருக்கடி நிலமைகள் கடுமையாக காணப்பட்ட சமயங்களிலும் தடையின்றி போதை பொருள் வர்த்தகம் இடம் பெற்றுள்ளமை தெரியவருகின்றது. 

கடந்த வருடம் (2022.10.26)  மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் (2017-2022) வரை கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, ஐஸ் போதை பொருட்கள் தொடர்பிலான விபரங்கள் கோரப்பட்டிருந்தது.


இந்த நிலையில் குறித்த தகவலை வழங்க முடியாது என மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் தெரிவித்திருந்த நிலையில் தகவல் கோரிக்கைக்கான பதிலையும் சிங்கள மொழி மூலம் அறியத்தந்திருந்தது.

இந்த நிலையில் குறித்த தகவல் கோரிக்கை மறுப்பு பொறுத்தமற்றதாக காணப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் குறித்தொதுக்கப்பட்ட அதிகாரிக்கும் விண்ணப்பதாரியால் மேன் முறையீடு  அனுப்பப்பட்டிருந்த போதும் கோரிக்கைகான தகவல் வழங்கப்படவில்லை. 

இவ்வாறான பின்னனியில் குறித்த முறைப்பாடு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் கோரிக்கையாளர் கோரிய தகவல்களை உடனடியாக   தமிழ் மொழியில் கோரிக்கையாளருக்கு வழங்குமாறு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு பணித்திருந்தது.

இந்த நிலையில் குறித்த தகவல் தமிழ் மொழியில் வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த 6 வருடங்களில் இடம் பெற்ற போதை பொருள் கடத்தல் முறியடிப்பு சம்பவங்கள் தொடர்பிலும், கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் தொடர்பிலும், மன்னார் பொலிஸாரினால் வழங்கப்பட்ட சில பிழையான மற்றும் சந்தேகத்திற்குரிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளது.


குறித்த தகவலின் அடிப்படையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள தலைமன்னார், பேசாலை, மன்னார், வங்காலை, சிலாவத்துறை, முருங்கன், இலுப்பைகடவை,மடு,அடம்பன் பொலிஸ் பிரிவுகள் உள்ளடங்களாக கடந்த 6 வருடங்களில் மாத்திரம் 600 மில்லியன் ரூபா பெருமதியான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.

அதில் குறிப்பாக (240 மில்லியன் ரூபா) பெறுமதியான 34 கிலோ கிராம் “ஐஸ்” வகை போதை பொருள் கடந்த நான்கு வருடங்களிலும். (340 மில்லியன் ரூபா) பெருமதியான 3445 கிலோ கிராம் “கேரள கஞ்சா” போதை பொருட்கள் கடந்த ஆறு வருடங்களிலும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் பொலிஸாரின் தகவலுக்கு மேலாக கேரொயின், கொக்கைன், அசிஸ் ஆகிய போதை பொருட்கள் தவிர்ந்து சுமார் 1000 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருட்கள் கடந்த ஆறு வருடங்களில் கைப்பற்றப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றது.

இவ்வாறான பாரியதொரு போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்றமை மாவட்டத்திற்கு பாரியதொரு சிக்கல் நிலமையை தோற்றிவிக்க கூடியதாகவே காணப்படுகின்றது.


மன்னார் பொலிஸாரின் தகவலின் பிரகாரம்

1.  2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 139 சோதனைகளில் 259 கிலோ 263 கிராம் 263 மில்லிகிராம் கேரள கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,

2.2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 148 சோதனைகளில் 347 கிலோ 240 கிராம் 925 மில்லி கிராம் கேரள கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டதாகவும்,

3.2019 கொரோனா பரவல் ஆரம்பமான காலப்பகுதியில் 186 சோதனைகளில் 643 கிலோ 392 கிராம் 612 மில்லி கிராம் கேரள கஞ்சாவும் அதனுடன் கூடிய 6 சோதனைகளில் 937 கிராம் 560 மில்லி கிராம் ஐஸ் ரக போதை பொருட்களும் மீட்கப்பட்டதாகவும் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரம்

4.2020 ஆம் ஆண்டு கொரோன பரவல் உச்ச கட்டத்தை எட்டியிருந்த நேரத்தில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அதிகம் அமுல்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட  186 சோதனைகளில் 643 கிலோ 392 கிராம் 612 மில்லி கிராம் கேரள கஞ்சாவும் அதனுடன் கூடிய 6 சோதனைகளில் 937 கிராம் 560 மில்லி கிராம் ஐஸ் ரக போதை பொருட்களும் மீட்கப்பட்டதாகவும்,


5.மேலும் 2021 ஆம் ஆண்டு மன்னார் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட 145 சோதனை நடவடிக்கைகளில் 285 கிலோ 726 கிராம் 101 மில்லி கிராம் கேரள கஞ்சாவும் 45 சோதனை நடவடிக்கைகளின் போது 14 கிலோ 687 கிராம் 360 மில்லி கிராம் ஐஸ் ரக போதை பொருளும் மீட்கப்பட்டுள்ளதாகவும்,

6.கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட 93 சோதனை நடவடிக்கைகளில் 254 கிலோ  494 கிராம் 548 மில்லி கிராம் கஞ்சா போதை பொருளும் 67 சோதனை நடவடிக்கையில் 17 கிலோ  755 கிராம் 080 மில்லி கிராம் ஐஸ் ரக போதை பொருளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வழங்கியிருந்தனர்.

அதிலும் எந்த ஒரு நாட்டிலும் நடை பெறாத அளவிற்கு மன்னாரில் கடந்த (2019 மற்றும் 2020) ஆண்டு சொல்லி வைத்தாற்போல் 186 சோதனை நடவடிக்கைகளில் 643 கிலோ 392 கிராம் 612 மில்லிகிராம் கஞ்சா போதை பொருளும் 6 சோதனை நடவடிக்கையில் 937 கிராம் 560 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரு ஆண்டுகளிலும் ஒரே அளவு சோதனை நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் ஒரு கிலோ, ஒரே கிராம், ஒரே மில்லிகிராம் கூட மாற்றம் இன்றி அதே அளவில் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதென்பது பொலிஸாரின் தகவலில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதே நேரம் கடந்த 2022 ஆண்டு மன்னார் பொலிஸார் வழங்கிய தகவலின் பிரகாரம் 93 சோதனை நடவடிக்கையில் 254 கிலோ 494 கிராம் 548 மில்லி கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தகவல் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் மன்னார் சட்டத்தரணி ஒருவர் ஊடாக மாத்திரம் கடந்த 2022 ஆண்டு 254 கிலோவுக்கும் அதிகமான அளவு கஞ்சா போதை பொருள் தொடர்பிலான பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதிலும் 2022.03.14 திகதி 160 கிலோ 550 கிராம் கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்களும் , அதே ஆண்டில் மன்னார் தேவன்பிட்டி பகுதியில் படகு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 203 கிலோ 800 கிராம் கஞ்சா போதை பொருளும், மன்னார் காமன்ஸ் பின்புறத்தில் 41 கிலோ 620 மில்லி கிராம் கஞ்சாவும், மேலும் தலைமன்னார் பகுதியில் 135 கிலோ 569 கிராமுடம் இரு நபர்களும் என சுமார் 5 வழக்குகளில் மாத்திரம் 540 கிலோவுக்கு மேல் கஞ்சா கைப்பற்றப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மன்னார் பொலிஸார் 254 கிலோ மாத்திரமே கைப்பற்றப்பட்டதாக தகவல் வழங்கியுள்ளனர்.


மிகுதி 250 கிலோ கஞ்சா தொடர்பிலான விடயங்களோ அதே நேரம் மேலும் இடம் பெற்ற 88 சோதனை நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்பது பொலிஸாரில் தகவல் மற்றும் நடவடிக்கைகளில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது மாத்திரம் இன்றி பொலிஸார் வழங்கிய தகவலின் பிரகாரம் 2019 ஆண்டு வெறுமனே 937 கிராம் 560 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் மாத்திரமே கைப்பறப்பட்டதாக தகவல் வழங்கியிருந்தனர்.

இருந்த போதிலும் 2019 ஆண்டு 08 மாதம் 16 திகதி தலைமன்னார் கடற்படையால் 1 கிலோ 05 கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் 2019-09-25 திகதி திருகேதீஸ்வரம் பகுதியில் 230 கிராம் போதை பொருளும் 2019-05-22 திகதி செளத்பார் பகுதியில் 923 கிராமும் மொத்தமாக 2.158 கிலோ கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டதற்கான தகவல் ஊடகங்களில் மன்னார் பொலிஸாரல் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.

அதே போல் 2021 ஆம் ஆண்டு 14 கிலோ 687 கிராம் 360 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் மாத்திரமே கைப்பற்றப்பட்டதாக பொலிஸாரால் தகவல் வழங்கப்பட்டுள்ள போதிலும் 2021 ஆம் ஆண்டு முருங்கன் பகுதியில் 10 கிலோ ஐஸ் போதை பொருளுடன் இரு சந்தேக நபர்களும் தலைமன்னார் பகுதியில் 9 கிலோ 735 கிராம் ஐஸ் போதை பொருளுடன் 4 சந்தேக நபர்களும் அரச பேரூந்து ஒன்றில் 250 கிராம் ஐஸ் போதை பொருளுடன் இரு சந்தேக நபர்களும் எல்லாமாக 19 கிலோ 985 கிராம் போதை பொருளும் 8 சந்தேக நபர்களும் வெறும் மூன்று சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் வழங்கிய தகவலின் பிரகாரம் மிகுதி 42 ஐஸ் போதை பொருள் சோதனை நடவடிக்கை தொடர்பிலும் மேலதிகமாக கைப்பற்றப்பட்டதாக கண்டறியப்பட்ட 5 கிலோ ஐஸ் போதை பொருள் தொடர்பிலும் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.


அதே ஆண்டில் 145 சோதனை நடவடிக்கைகளில் 285 கிலோ 726 கிராம் 101 மில்லிகிராம் மாத்திரமே கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக மன்னார் பொலிஸார் தகவல் வழங்கியிருந்தனர். 

ஆனாலும் 2021-09-21 திகதி இலுப்பைகடவை கத்தாளம் பிட்டி பகுதியில் 104 கிலோ கேரள கஞ்சா விசேட அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, 

2021-08-28 திகதி மன்னார் தம்பன்னை குளம் பகுதியில் 189 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர், 2021-08-11 திகதி மன்னார் இலுப்பைகடவை பகுதியில் 131 கிலோ 725 கிராம் கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், 2021-04-18 திகதி இலுப்பை கடவை சிப்பியாறு பகுதியில் 89 கிலோ 355 கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர், 2021-09-21 திகதி நானாட்டான் நறுவிலிக்குளம் பகுதியில் 228 கிலோ எடை கொண்ட கஞ்சா போதை பொருளும் கைப்பற்றப்பட்டிருந்தது.


இவ்வாறு  ஐந்து சோதனை நடவடிக்கைகளின் போதே மன்னார் பொலிஸாரால் 742 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் 285 கிலோ மாத்திரமே தங்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வழங்கியமை தொடர்பில் சந்தேகம் மாத்திரமே கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு பொலிஸாரல் வழங்கப்பட்ட போதை பொருள் தொடர்பிலான பல குழறுபடியான தகவல்கள் போதை பொருள் தடுப்புக்கு எதிரான பொலிஸாரின் செயற்பாட்டில் சந்தேகத்தையும் நம்பிகையையும் இழக்கை செய்கின்றது.

இது ஒரு புறம் இருக்க, கடந்த வருடம் மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் பணியாற்றுகின்ற இராணுவ அதிகாரி ஒருவருக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் கஞ்சா போதை பொருள் கடத்தல் இடம் பெற்ற நிலையில் மன்னார் பிரதான பாலத்தில் அமைந்துள்ள சோதனை சாவடியில் கேரள கஞ்சாவுடன் குறித்த வாகனம் கைப்பறப்பட்டிருந்தது.


அதே நேரம் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் சான்று பொருளாக காணப்பட்ட போதை பொருளை திருடி விற்பனை செய்த பொலிஸ் அதிகாரி இருவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

அத்துடன் முருங்கன் பகுதியில் கஞ்சா விற்பனையுடன் தொடர்புபட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

ஒட்டு மொத்தமாக பொலிஸாரின் தகவலின் பிரகாரம் கடந்த ஆறு வருடத்தில் மன்னார் மாவட்டதில் 450 மில்லியன் ரூபா பெறுமதியான 4550 கிலோ கிராம் கஞ்சா போதை பொருளும் அதே நேரம் கடந்த நான்கு வருடங்களில் 32 கிலோ ஐஸ் போதை பொருள் கடத்தல் சம்பவங்களும் இனம் காணப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.


ஆனாலும் இந்த தகவல்களை விட அதிகளவான கேரள கஞ்சாவும் ஐஸ் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதின் பிரகாரம் சுமார் 1000 மில்லியனுக்கும் அதிகமான அளவு போதை பொருட்கள் மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் ஐஸ் ரக போதை பொருள் கடந்த வருடம் வரை ஆபத்தான ஒளடத சட்டத்துக்குள் உள்ளீர்க்கப்படாத நிலையில் கடந்த 2022 ஆண்டு 11 மாதம் 23 திகதி 2022 ஆம் ஆண்டின் 41 இலக்க விச வர்க்க,அபின் மற்றும் அபாயகரமான ஒளடத சட்டத்தின் கீழ் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு “மெதபற்றமைன்” என சொல்லப்படும் ஐஸ் போதை பொருள் அபாயகரமான ஒளடதமாக குறிப்பிடப்பட்டது.

அதே நேரம் ஐந்து கிராமுக்கு மேல் ஐஸ் போதை பொருள் உடமையில் வைத்திருப்பது மரண தண்டனைக்குறிய குற்றமாககவும் 10 கிராமுக்கு மேல் ஐஸ் போதை பொருளுடன் சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்படும் நபருக்கு மேன் முறையீட்டு நீதி மன்றத்தில் மாத்திரமே பிணை வழங்க முடியும் என்ற அளவுக்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. 


ஆயினும் அண்மைகாலமாக இடம் பெற்ற கடத்தல் சம்பவங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது கடந்த ஆறு வருடங்களில் கேரள கஞ்சா கடத்தல் குறைவடைந்தும் அதே நேரம் ஐஸ் ரக போதை பொருள் கடத்தல்கள் அதிகரித்து வருகின்றமையும் தெளிவாகியுள்ளது.

கடந்த வருடம் 10 கிலோ மற்றும் 9 கிலோ ஐஸ் போதை பொருளுடன் நாள்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் இம்மாத ஆரம்பத்தில் 12 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதை பொருளுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் மன்னார் மாவட்டத்தில் தீவக பகுதியிலே  அதிக சோதனை நடவடிக்கை இடம் பெற்றுள்ளதுடன் பேசாலை தலைமன்னார் பகுதிகளிலே அதிகளவு போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.


மன்னார் தீவகபகுதி கரையோரம் முழுவதும் கடற்படையினரின் பாதுகாப்பு சோதனை சாவடிகள், பாதுகாப்பு முகாம்கள்,மேலும் வடமத்திய கட்டளை தலைமையகம் காணப்படுகின்ற போதிலும் அதே நேரம் நூற்றுக்கணக்கான புலனாய்வாலர்கள் கடமையில் காணப்படுகின்ற போதும் இதை தவிர்த்து பல பிரதேசங்களில் இராணுவ பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகள் காணப்படுகின்ற போதும் இவ்வறான பாரியதொறு போதை பொருள் கடத்தல் வர்த்தகம் எவ்வாறு சாத்தியம் என்பது பலரின் கேள்வியாகும்.

இவ்வாறன பாரிய போதை பொருள் கடத்தல் என்பது நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பில் காணப்படும் பாரியதொரு குறைபாட்டை வெளிப்படையாக எடுத்துக்காட்டுவதுடன் இவ்வாறான கடல்வழியான கடத்தல் சம்பவங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது.

பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவல்கள் என்பது வெறுமனே ஆறுவருடங்களில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் கணக்குகளே தவிர இன்னும் பல நூற்றுக்கணக்கான கிலோ போதை பொருட்கடத்தல்கள் வெற்றிகரமாக போதை பொருள் மாபியக்களால் இடம் பெற்றிருக்கலாம்.


போதை பொருளுக்கு எதிரான வலுவான கட்டமைப்பை மேற்கொள்ள வேண்டிய பொலிஸார், இராணுவத்தினரே சில போதை பொருள்கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு வரும் நிலையிலும் அதே நேரம் போதை பொருள் கடத்தல் தொடர்பில் பிழையான மற்றும் சந்தேகத்துக்குறிய தகவல்களை வழங்கி வரும் நிலையில் போதை பொருள்கடத்தல் தடுப்பு என்பது காணல் நீரே.

இவ்வாறான போதை பொருள் கடத்தல்களும், அதற்கு துணை நிற்பவர்களும், பெரும் போதை வர்தகர்களும். அரசியல் அழுத்தங்களோ ,அரசியல் பின்னனிகளோ ,அதிகார துஸ்பிரயோகங்களோ, இன்றி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் போதே இந்த நாடு போதை பொருள் அற்ற நாடு என்பது சாத்தியமாகும்.

போதை பொருள் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பில் வலுவான நீதி மற்றும் சட்ட கட்டமைப்பு இலங்கையில் காணப்படுகின்ற போதும் நிர்வாக ரீதியாக காணப்படும் குறைபாடுகளும், சில அதிகார துஸ்பிரயோகங்களும், கடத்தலுக்கு துணைபோகும் நடவடிக்கைகளாலும், போதை பொருள் பாவனையும் அதானால் ஏற்படும் குற்ற செயல்களும் நிறுத்த முடியாத பிரச்சினையாக நீண்டு கொண்டே சொல்கின்றது.

நாடளாவிய ரீதியில் காணப்படும் பாதுகாப்பு கட்டமைப்பிலும், நிர்வாக ரீதியாக காணப்படும் குறைபாடுகளும், சரி செய்யப்படும் வரை நாடளாவிய ரீதியில் எத்தனை கோடி செலவு செய்து மேற்கொள்ளும் எந்த ஒரு விழிப்புணர்வும், எந்த ஒரு போதை பொருள் எதிர்ப்பு நடவடிக்கையும் எந்த ஒரு மாற்றத்தையும் ஆழமாக ஏற்படுத்த போவதில்லை என்பதே யதார்த்தம்..


போதை பொருள் கடத்தலின் மையமாகியுள்ள மன்னார். தடுப்பது யார். samugammedia ஜோசப் நயன்இலங்கையின் வட பகுதிகளில் அண்மைகாலமாக போதை பொருள் பயன்பாடு மற்றும் போதை பொருள் பாவனையோடு தொடர்புபட்ட குற்ற செயல்கள் சடுதியாக அதிகரித்துள்ளமை அண்மைகால தரவுகளின் அடிப்படையில் அறிய முடிகின்றது.மன்னாரில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவனிடம் இருந்து 4 கிலோ 700 கிராம் கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த மாணவனும் கைது செய்யப்பட்டிருந்தான்.இவ்வாறு - வடபகுதியில் பாடசாலை மாணவர்கள் போதை பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமையும் அதே நேரம் அதிகரித்த போதை பொருள் பாவனை காரணமாக மரணமடைந்த மற்றும், தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் தொடர்பிலும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.  இந்த நிலையில் இலங்கையின் கேரள கஞ்சா களஞ்சியம் என வர்ணிக்கப்படும் அளவுக்கு வடக்கு கடல் பகுதியூடாக நாட்டுக்குள் கொண்டுவரப்படும் போதை பொருட்களின் தொகை பாரிய அளவு அதிகரித்திருக்கின்றது.கடந்த வருடம் தூத்துக்குடி அருகே முள்ளகாடு கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கை வழியாக வளைகுடா நாட்டிற்கு கடத்த இருந்த  15 கோடி ரூபாய்  மதிப்பிலான 5 பாக்கெட்டுகளில் தடை செய்யப்பட்ட  ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது.பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அடுத்தடுத்து கஞ்சா மூட்டைகள் கரை ஒதுங்குவது குறித்து இந்திய உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில் தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி சென்ற போது  நடுக்கடலில் படகு மூழ்கியதில்  படகில்  இருந்த கஞ்சா மூட்டைகள் கடலில் விழுந்து கரை ஒதுங்கியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியிருந்தது இவ்வாறு 15 நாட்களில் தமிழக கடலோர பகுதிகளில் சுமார் 800 கிலோவுக்கு அதிகமான கஞ்சா கரை  ஒதுங்கியிருந்தது.இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு மரத்தடிகளை ஏற்றி சென்ற கப்பலில் உள்ள  சரக்கு பெட்டகம் ஒன்றில் இருந்து 9 கருப்பு நிற பேக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1000 கோடி பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் இந்திய  மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் அசிஸ் என சொல்லப்படும் 97 கிலோ ஆபத்தான போதை பொருளுடன் இந்திய பிரஜைகள் மூவர் இலங்கையில் கைது செய்யப்பட்டனர்.கடந்த வருடம் இந்திய ஊடகங்கள் ஊடாக இலங்கையுடன் தொடர்புபட்டு சில கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் மேற்படி செய்திகளை வெளியிட்டிருந்தன.குறிப்பாக வடபகுதியில்  கடலோர மாவட்டங்களான மன்னார், யாழ்பாணம் மாவட்டங்கள் ஊடாகவே இந்தியாவில் இருந்து அதிகளவு கடல் வழி போதை வர்த்தகங்கள் இடம் பெற்று வருகின்றமை அண்மைகாலமாக இடம் பெறும் போதை பொருள் கைது நடவடிக்கைகளில் அறிய முடிகின்றது.இவ்வாறான நிலையில் மன்னார் மாவட்டத்தில் கடந்த ஆறு வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 600 மில்லியன் ரூபா பெறுமதியான “கேரள கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதை பொருட்கள்” மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் வழங்கிய தகவல் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.அதிலும் நாட்டில் கொரோனா கட்டுப்படுகள்,பொருளாதார நெருக்கடி நிலமைகள் கடுமையாக காணப்பட்ட சமயங்களிலும் தடையின்றி போதை பொருள் வர்த்தகம் இடம் பெற்றுள்ளமை தெரியவருகின்றது. கடந்த வருடம் (2022.10.26)  மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் (2017-2022) வரை கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, ஐஸ் போதை பொருட்கள் தொடர்பிலான விபரங்கள் கோரப்பட்டிருந்தது.இந்த நிலையில் குறித்த தகவலை வழங்க முடியாது என மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் தெரிவித்திருந்த நிலையில் தகவல் கோரிக்கைக்கான பதிலையும் சிங்கள மொழி மூலம் அறியத்தந்திருந்தது.இந்த நிலையில் குறித்த தகவல் கோரிக்கை மறுப்பு பொறுத்தமற்றதாக காணப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் குறித்தொதுக்கப்பட்ட அதிகாரிக்கும் விண்ணப்பதாரியால் மேன் முறையீடு  அனுப்பப்பட்டிருந்த போதும் கோரிக்கைகான தகவல் வழங்கப்படவில்லை. இவ்வாறான பின்னனியில் குறித்த முறைப்பாடு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் கோரிக்கையாளர் கோரிய தகவல்களை உடனடியாக   தமிழ் மொழியில் கோரிக்கையாளருக்கு வழங்குமாறு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு பணித்திருந்தது.இந்த நிலையில் குறித்த தகவல் தமிழ் மொழியில் வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த 6 வருடங்களில் இடம் பெற்ற போதை பொருள் கடத்தல் முறியடிப்பு சம்பவங்கள் தொடர்பிலும், கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் தொடர்பிலும், மன்னார் பொலிஸாரினால் வழங்கப்பட்ட சில பிழையான மற்றும் சந்தேகத்திற்குரிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளது.குறித்த தகவலின் அடிப்படையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள தலைமன்னார், பேசாலை, மன்னார், வங்காலை, சிலாவத்துறை, முருங்கன், இலுப்பைகடவை,மடு,அடம்பன் பொலிஸ் பிரிவுகள் உள்ளடங்களாக கடந்த 6 வருடங்களில் மாத்திரம் 600 மில்லியன் ரூபா பெருமதியான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.அதில் குறிப்பாக (240 மில்லியன் ரூபா) பெறுமதியான 34 கிலோ கிராம் “ஐஸ்” வகை போதை பொருள் கடந்த நான்கு வருடங்களிலும். (340 மில்லியன் ரூபா) பெருமதியான 3445 கிலோ கிராம் “கேரள கஞ்சா” போதை பொருட்கள் கடந்த ஆறு வருடங்களிலும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் பொலிஸாரின் தகவலுக்கு மேலாக கேரொயின், கொக்கைன், அசிஸ் ஆகிய போதை பொருட்கள் தவிர்ந்து சுமார் 1000 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருட்கள் கடந்த ஆறு வருடங்களில் கைப்பற்றப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றது.இவ்வாறான பாரியதொரு போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்றமை மாவட்டத்திற்கு பாரியதொரு சிக்கல் நிலமையை தோற்றிவிக்க கூடியதாகவே காணப்படுகின்றது.மன்னார் பொலிஸாரின் தகவலின் பிரகாரம்1.  2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 139 சோதனைகளில் 259 கிலோ 263 கிராம் 263 மில்லிகிராம் கேரள கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,2.2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 148 சோதனைகளில் 347 கிலோ 240 கிராம் 925 மில்லி கிராம் கேரள கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டதாகவும்,3.2019 கொரோனா பரவல் ஆரம்பமான காலப்பகுதியில் 186 சோதனைகளில் 643 கிலோ 392 கிராம் 612 மில்லி கிராம் கேரள கஞ்சாவும் அதனுடன் கூடிய 6 சோதனைகளில் 937 கிராம் 560 மில்லி கிராம் ஐஸ் ரக போதை பொருட்களும் மீட்கப்பட்டதாகவும் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.அதே நேரம்4.2020 ஆம் ஆண்டு கொரோன பரவல் உச்ச கட்டத்தை எட்டியிருந்த நேரத்தில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அதிகம் அமுல்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட  186 சோதனைகளில் 643 கிலோ 392 கிராம் 612 மில்லி கிராம் கேரள கஞ்சாவும் அதனுடன் கூடிய 6 சோதனைகளில் 937 கிராம் 560 மில்லி கிராம் ஐஸ் ரக போதை பொருட்களும் மீட்கப்பட்டதாகவும்,5.மேலும் 2021 ஆம் ஆண்டு மன்னார் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட 145 சோதனை நடவடிக்கைகளில் 285 கிலோ 726 கிராம் 101 மில்லி கிராம் கேரள கஞ்சாவும் 45 சோதனை நடவடிக்கைகளின் போது 14 கிலோ 687 கிராம் 360 மில்லி கிராம் ஐஸ் ரக போதை பொருளும் மீட்கப்பட்டுள்ளதாகவும்,6.கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட 93 சோதனை நடவடிக்கைகளில் 254 கிலோ  494 கிராம் 548 மில்லி கிராம் கஞ்சா போதை பொருளும் 67 சோதனை நடவடிக்கையில் 17 கிலோ  755 கிராம் 080 மில்லி கிராம் ஐஸ் ரக போதை பொருளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வழங்கியிருந்தனர்.அதிலும் எந்த ஒரு நாட்டிலும் நடை பெறாத அளவிற்கு மன்னாரில் கடந்த (2019 மற்றும் 2020) ஆண்டு சொல்லி வைத்தாற்போல் 186 சோதனை நடவடிக்கைகளில் 643 கிலோ 392 கிராம் 612 மில்லிகிராம் கஞ்சா போதை பொருளும் 6 சோதனை நடவடிக்கையில் 937 கிராம் 560 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.இரு ஆண்டுகளிலும் ஒரே அளவு சோதனை நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் ஒரு கிலோ, ஒரே கிராம், ஒரே மில்லிகிராம் கூட மாற்றம் இன்றி அதே அளவில் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதென்பது பொலிஸாரின் தகவலில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதே நேரம் கடந்த 2022 ஆண்டு மன்னார் பொலிஸார் வழங்கிய தகவலின் பிரகாரம் 93 சோதனை நடவடிக்கையில் 254 கிலோ 494 கிராம் 548 மில்லி கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தகவல் வழங்கியிருந்தனர்.இந்த நிலையில் மன்னார் சட்டத்தரணி ஒருவர் ஊடாக மாத்திரம் கடந்த 2022 ஆண்டு 254 கிலோவுக்கும் அதிகமான அளவு கஞ்சா போதை பொருள் தொடர்பிலான பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிலும் 2022.03.14 திகதி 160 கிலோ 550 கிராம் கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்களும் , அதே ஆண்டில் மன்னார் தேவன்பிட்டி பகுதியில் படகு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 203 கிலோ 800 கிராம் கஞ்சா போதை பொருளும், மன்னார் காமன்ஸ் பின்புறத்தில் 41 கிலோ 620 மில்லி கிராம் கஞ்சாவும், மேலும் தலைமன்னார் பகுதியில் 135 கிலோ 569 கிராமுடம் இரு நபர்களும் என சுமார் 5 வழக்குகளில் மாத்திரம் 540 கிலோவுக்கு மேல் கஞ்சா கைப்பற்றப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மன்னார் பொலிஸார் 254 கிலோ மாத்திரமே கைப்பற்றப்பட்டதாக தகவல் வழங்கியுள்ளனர்.மிகுதி 250 கிலோ கஞ்சா தொடர்பிலான விடயங்களோ அதே நேரம் மேலும் இடம் பெற்ற 88 சோதனை நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்பது பொலிஸாரில் தகவல் மற்றும் நடவடிக்கைகளில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இது மாத்திரம் இன்றி பொலிஸார் வழங்கிய தகவலின் பிரகாரம் 2019 ஆண்டு வெறுமனே 937 கிராம் 560 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் மாத்திரமே கைப்பறப்பட்டதாக தகவல் வழங்கியிருந்தனர்.இருந்த போதிலும் 2019 ஆண்டு 08 மாதம் 16 திகதி தலைமன்னார் கடற்படையால் 1 கிலோ 05 கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.அத்துடன் 2019-09-25 திகதி திருகேதீஸ்வரம் பகுதியில் 230 கிராம் போதை பொருளும் 2019-05-22 திகதி செளத்பார் பகுதியில் 923 கிராமும் மொத்தமாக 2.158 கிலோ கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டதற்கான தகவல் ஊடகங்களில் மன்னார் பொலிஸாரல் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.அதே போல் 2021 ஆம் ஆண்டு 14 கிலோ 687 கிராம் 360 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் மாத்திரமே கைப்பற்றப்பட்டதாக பொலிஸாரால் தகவல் வழங்கப்பட்டுள்ள போதிலும் 2021 ஆம் ஆண்டு முருங்கன் பகுதியில் 10 கிலோ ஐஸ் போதை பொருளுடன் இரு சந்தேக நபர்களும் தலைமன்னார் பகுதியில் 9 கிலோ 735 கிராம் ஐஸ் போதை பொருளுடன் 4 சந்தேக நபர்களும் அரச பேரூந்து ஒன்றில் 250 கிராம் ஐஸ் போதை பொருளுடன் இரு சந்தேக நபர்களும் எல்லாமாக 19 கிலோ 985 கிராம் போதை பொருளும் 8 சந்தேக நபர்களும் வெறும் மூன்று சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் வழங்கிய தகவலின் பிரகாரம் மிகுதி 42 ஐஸ் போதை பொருள் சோதனை நடவடிக்கை தொடர்பிலும் மேலதிகமாக கைப்பற்றப்பட்டதாக கண்டறியப்பட்ட 5 கிலோ ஐஸ் போதை பொருள் தொடர்பிலும் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.அதே ஆண்டில் 145 சோதனை நடவடிக்கைகளில் 285 கிலோ 726 கிராம் 101 மில்லிகிராம் மாத்திரமே கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக மன்னார் பொலிஸார் தகவல் வழங்கியிருந்தனர். ஆனாலும் 2021-09-21 திகதி இலுப்பைகடவை கத்தாளம் பிட்டி பகுதியில் 104 கிலோ கேரள கஞ்சா விசேட அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, 2021-08-28 திகதி மன்னார் தம்பன்னை குளம் பகுதியில் 189 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர், 2021-08-11 திகதி மன்னார் இலுப்பைகடவை பகுதியில் 131 கிலோ 725 கிராம் கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், 2021-04-18 திகதி இலுப்பை கடவை சிப்பியாறு பகுதியில் 89 கிலோ 355 கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர், 2021-09-21 திகதி நானாட்டான் நறுவிலிக்குளம் பகுதியில் 228 கிலோ எடை கொண்ட கஞ்சா போதை பொருளும் கைப்பற்றப்பட்டிருந்தது.இவ்வாறு  ஐந்து சோதனை நடவடிக்கைகளின் போதே மன்னார் பொலிஸாரால் 742 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் 285 கிலோ மாத்திரமே தங்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வழங்கியமை தொடர்பில் சந்தேகம் மாத்திரமே கொள்ள வேண்டிய நிலை உள்ளது.இவ்வாறு பொலிஸாரல் வழங்கப்பட்ட போதை பொருள் தொடர்பிலான பல குழறுபடியான தகவல்கள் போதை பொருள் தடுப்புக்கு எதிரான பொலிஸாரின் செயற்பாட்டில் சந்தேகத்தையும் நம்பிகையையும் இழக்கை செய்கின்றது.இது ஒரு புறம் இருக்க, கடந்த வருடம் மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் பணியாற்றுகின்ற இராணுவ அதிகாரி ஒருவருக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் கஞ்சா போதை பொருள் கடத்தல் இடம் பெற்ற நிலையில் மன்னார் பிரதான பாலத்தில் அமைந்துள்ள சோதனை சாவடியில் கேரள கஞ்சாவுடன் குறித்த வாகனம் கைப்பறப்பட்டிருந்தது.அதே நேரம் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் சான்று பொருளாக காணப்பட்ட போதை பொருளை திருடி விற்பனை செய்த பொலிஸ் அதிகாரி இருவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது.அத்துடன் முருங்கன் பகுதியில் கஞ்சா விற்பனையுடன் தொடர்புபட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.ஒட்டு மொத்தமாக பொலிஸாரின் தகவலின் பிரகாரம் கடந்த ஆறு வருடத்தில் மன்னார் மாவட்டதில் 450 மில்லியன் ரூபா பெறுமதியான 4550 கிலோ கிராம் கஞ்சா போதை பொருளும் அதே நேரம் கடந்த நான்கு வருடங்களில் 32 கிலோ ஐஸ் போதை பொருள் கடத்தல் சம்பவங்களும் இனம் காணப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.ஆனாலும் இந்த தகவல்களை விட அதிகளவான கேரள கஞ்சாவும் ஐஸ் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதின் பிரகாரம் சுமார் 1000 மில்லியனுக்கும் அதிகமான அளவு போதை பொருட்கள் மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இலங்கையில் ஐஸ் ரக போதை பொருள் கடந்த வருடம் வரை ஆபத்தான ஒளடத சட்டத்துக்குள் உள்ளீர்க்கப்படாத நிலையில் கடந்த 2022 ஆண்டு 11 மாதம் 23 திகதி 2022 ஆம் ஆண்டின் 41 இலக்க விச வர்க்க,அபின் மற்றும் அபாயகரமான ஒளடத சட்டத்தின் கீழ் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு “மெதபற்றமைன்” என சொல்லப்படும் ஐஸ் போதை பொருள் அபாயகரமான ஒளடதமாக குறிப்பிடப்பட்டது.அதே நேரம் ஐந்து கிராமுக்கு மேல் ஐஸ் போதை பொருள் உடமையில் வைத்திருப்பது மரண தண்டனைக்குறிய குற்றமாககவும் 10 கிராமுக்கு மேல் ஐஸ் போதை பொருளுடன் சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்படும் நபருக்கு மேன் முறையீட்டு நீதி மன்றத்தில் மாத்திரமே பிணை வழங்க முடியும் என்ற அளவுக்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஆயினும் அண்மைகாலமாக இடம் பெற்ற கடத்தல் சம்பவங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது கடந்த ஆறு வருடங்களில் கேரள கஞ்சா கடத்தல் குறைவடைந்தும் அதே நேரம் ஐஸ் ரக போதை பொருள் கடத்தல்கள் அதிகரித்து வருகின்றமையும் தெளிவாகியுள்ளது.கடந்த வருடம் 10 கிலோ மற்றும் 9 கிலோ ஐஸ் போதை பொருளுடன் நாள்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் இம்மாத ஆரம்பத்தில் 12 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதை பொருளுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறான நிலையில் மன்னார் மாவட்டத்தில் தீவக பகுதியிலே  அதிக சோதனை நடவடிக்கை இடம் பெற்றுள்ளதுடன் பேசாலை தலைமன்னார் பகுதிகளிலே அதிகளவு போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.மன்னார் தீவகபகுதி கரையோரம் முழுவதும் கடற்படையினரின் பாதுகாப்பு சோதனை சாவடிகள், பாதுகாப்பு முகாம்கள்,மேலும் வடமத்திய கட்டளை தலைமையகம் காணப்படுகின்ற போதிலும் அதே நேரம் நூற்றுக்கணக்கான புலனாய்வாலர்கள் கடமையில் காணப்படுகின்ற போதும் இதை தவிர்த்து பல பிரதேசங்களில் இராணுவ பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகள் காணப்படுகின்ற போதும் இவ்வறான பாரியதொறு போதை பொருள் கடத்தல் வர்த்தகம் எவ்வாறு சாத்தியம் என்பது பலரின் கேள்வியாகும்.இவ்வாறன பாரிய போதை பொருள் கடத்தல் என்பது நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பில் காணப்படும் பாரியதொரு குறைபாட்டை வெளிப்படையாக எடுத்துக்காட்டுவதுடன் இவ்வாறான கடல்வழியான கடத்தல் சம்பவங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது.பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவல்கள் என்பது வெறுமனே ஆறுவருடங்களில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் கணக்குகளே தவிர இன்னும் பல நூற்றுக்கணக்கான கிலோ போதை பொருட்கடத்தல்கள் வெற்றிகரமாக போதை பொருள் மாபியக்களால் இடம் பெற்றிருக்கலாம்.போதை பொருளுக்கு எதிரான வலுவான கட்டமைப்பை மேற்கொள்ள வேண்டிய பொலிஸார், இராணுவத்தினரே சில போதை பொருள்கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு வரும் நிலையிலும் அதே நேரம் போதை பொருள் கடத்தல் தொடர்பில் பிழையான மற்றும் சந்தேகத்துக்குறிய தகவல்களை வழங்கி வரும் நிலையில் போதை பொருள்கடத்தல் தடுப்பு என்பது காணல் நீரே.இவ்வாறான போதை பொருள் கடத்தல்களும், அதற்கு துணை நிற்பவர்களும், பெரும் போதை வர்தகர்களும். அரசியல் அழுத்தங்களோ ,அரசியல் பின்னனிகளோ ,அதிகார துஸ்பிரயோகங்களோ, இன்றி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் போதே இந்த நாடு போதை பொருள் அற்ற நாடு என்பது சாத்தியமாகும்.போதை பொருள் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பில் வலுவான நீதி மற்றும் சட்ட கட்டமைப்பு இலங்கையில் காணப்படுகின்ற போதும் நிர்வாக ரீதியாக காணப்படும் குறைபாடுகளும், சில அதிகார துஸ்பிரயோகங்களும், கடத்தலுக்கு துணைபோகும் நடவடிக்கைகளாலும், போதை பொருள் பாவனையும் அதானால் ஏற்படும் குற்ற செயல்களும் நிறுத்த முடியாத பிரச்சினையாக நீண்டு கொண்டே சொல்கின்றது.நாடளாவிய ரீதியில் காணப்படும் பாதுகாப்பு கட்டமைப்பிலும், நிர்வாக ரீதியாக காணப்படும் குறைபாடுகளும், சரி செய்யப்படும் வரை நாடளாவிய ரீதியில் எத்தனை கோடி செலவு செய்து மேற்கொள்ளும் எந்த ஒரு விழிப்புணர்வும், எந்த ஒரு போதை பொருள் எதிர்ப்பு நடவடிக்கையும் எந்த ஒரு மாற்றத்தையும் ஆழமாக ஏற்படுத்த போவதில்லை என்பதே யதார்த்தம்.

Advertisement

Advertisement

Advertisement