• Apr 26 2025

அரசியல் தீர்வொன்று கிடைத்திருக்குமானால் நாட்டில் இரத்தம் ஓடும் நிலைமை ஏற்பட்டிருக்காது! ஞா.சிறிநேசன்

Chithra / Apr 26th 2025, 4:46 pm
image


தமிழ் மக்களின் அகிம்சை போராட்டத்திற்கு தர்ம வழியில் அரசியல் தீர்வொன்று கிடைத்திருக்குமானால் 30 ஆண்டுகளாக இந்த நாட்டில் இரத்தம் ஓடும் நிலைமை ஏற்பட்டிருக்காது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுர்க்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கே.சோபனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத் மற்றும் முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வா தி.சரவணபவன், தமிழரசுக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள்,வாலிபர் முன்னணி,மகளிர் அணி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் ஆத்மசாந்திக்காக இரண்டு நிமிடங்கள் மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுரைகளும் நடைபெற்றன.


அரசியல் தீர்வொன்று கிடைத்திருக்குமானால் நாட்டில் இரத்தம் ஓடும் நிலைமை ஏற்பட்டிருக்காது ஞா.சிறிநேசன் தமிழ் மக்களின் அகிம்சை போராட்டத்திற்கு தர்ம வழியில் அரசியல் தீர்வொன்று கிடைத்திருக்குமானால் 30 ஆண்டுகளாக இந்த நாட்டில் இரத்தம் ஓடும் நிலைமை ஏற்பட்டிருக்காது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுர்க்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கே.சோபனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத் மற்றும் முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வா தி.சரவணபவன், தமிழரசுக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள்,வாலிபர் முன்னணி,மகளிர் அணி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் ஆத்மசாந்திக்காக இரண்டு நிமிடங்கள் மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுரைகளும் நடைபெற்றன.

Advertisement

Advertisement

Advertisement