• Apr 26 2025

முல்லையில் கடற்றொழில் அமைச்சரின் சாரதியின் காடைத்தனம்: ஜே.வி.பி யின் சுயரூபம் அம்பலம்- செல்வம் எம்.பி காட்டம்...!

Sharmi / Apr 26th 2025, 4:48 pm
image

முல்லைத்தீவில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனின் சாரதி, பொதுமகன் ஒருவரை தாக்கியமை  தமிழ் மக்கள் ஜேவிபியிடம் கேள்வி கேட்டால் பதில் அடிதான் என தமது காடைத்தனத்ததை வெளிப்படுத்தியுள்ளதாக ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 

யாழ் இளம்  கலைஞர் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூர் ஆட்சி மன்றத்தில் போட்டியிடம் வேட்பாளர்களின்  அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மீனவ சங்க தலைவர் ஒருவரை கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனின் சாரதி தாக்கியமை ஜே.வி.பி இன் இனவாதத்தை காட்டுவதாகவும் ஜனநாயகத்தை மறுப்பதாகவும் அமைகிறது. 

தாக்கப்பட்ட மீனவ சங்க தலைவர்,  முன்னாள் கடற்றொழில் அமைச்சர் இங்கு வருகை தந்து வாக்குறுதி தந்து நிறைவேற்றவில்லை. நீங்களும் இப்போது வருகை தந்து வாக்குறுதி தந்து சென்று விடுவீர்கள் எமது வீதி திருத்தப்படாது என கூறியிருந்தார்.

அவர் அவ்வாறு கருத்தை தெரிவித்தமை அவரது ஜனநாயக உரிமை அதுமட்டுமல்லாது தன்னிடம் இருந்து ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை ஏற்க முடியாத அமைச்சருடன் சென்ற சாரதி அவருடன் முரண்பட்டு அவரை தாக்கிய மை கண்டிக்கத்தக்க விடயம். 

தமிழ் மக்கள் ஜேவிபியிடம் கேள்வி கேட்க முடியாது அல்லது நாம் கூறுவதை கேட்க வேண்டும் இல்லாவிட்டால் தாக்குவோம் என்பதன் வெளிப்பாடு குறித்த மீனவர் சங்கத் தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் வெளிப்படுத்துகிறது.

இலங்கை அரசியல் வரலாற்றில் இனங்களுக்கிடையில் இனவாதத்தை விதைத்தவர்களில் முன்னிலை வகிக்கும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி என்கின்ற கடந்த கால ஜேவிபி என்பதை யாரும் மறக்க மாட்டார்கள். 

வவுனியாக்கு வந்த ஜே.வி.பி  அமைச்சர் பிமல் ரத்நாயக்க தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாதிகள் என்ற அர்த்தத்தில் தனது கருத்துக்களை முன் வைத்தார். 

தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் தமிழ் தலைவர்கள் இனவாதிகள் என்றால் அந்த இனவாதத்தை நாங்கள் செய்வதற்கு தயாராக இருக்கிறோம். 

கடந்த தேர்தலில் தமிழ் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி பல மூன்று பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றினாலும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கட்சிகள் ஒற்றுமையின்மை என்ற காரணத்திற்காகவே அவர்களுக்கு வாக்களிக்க முற்பட்டார்கள் என்பதை உண்மை.

தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில் ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தியினரை தமிழர் பகுதிகளில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும்.

இவர்களை விரட்டாத விட்டால் உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ் மக்கள் தமக்கு ஆணை தந்து விட்டார்கள் என சர்வதேசத்திற்கு கூறி தமிழ் மக்களின் அரசியல் தீர்வை இல்லாது ஒழிப்பார்கள். 

ஆகவே தமிழ் மக்கள் நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜேவிபியினரை புறந்தள்ளி  சங்கு சின்னத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


முல்லையில் கடற்றொழில் அமைச்சரின் சாரதியின் காடைத்தனம்: ஜே.வி.பி யின் சுயரூபம் அம்பலம்- செல்வம் எம்.பி காட்டம். முல்லைத்தீவில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனின் சாரதி, பொதுமகன் ஒருவரை தாக்கியமை  தமிழ் மக்கள் ஜேவிபியிடம் கேள்வி கேட்டால் பதில் அடிதான் என தமது காடைத்தனத்ததை வெளிப்படுத்தியுள்ளதாக ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். யாழ் இளம்  கலைஞர் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூர் ஆட்சி மன்றத்தில் போட்டியிடம் வேட்பாளர்களின்  அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மீனவ சங்க தலைவர் ஒருவரை கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனின் சாரதி தாக்கியமை ஜே.வி.பி இன் இனவாதத்தை காட்டுவதாகவும் ஜனநாயகத்தை மறுப்பதாகவும் அமைகிறது. தாக்கப்பட்ட மீனவ சங்க தலைவர்,  முன்னாள் கடற்றொழில் அமைச்சர் இங்கு வருகை தந்து வாக்குறுதி தந்து நிறைவேற்றவில்லை. நீங்களும் இப்போது வருகை தந்து வாக்குறுதி தந்து சென்று விடுவீர்கள் எமது வீதி திருத்தப்படாது என கூறியிருந்தார்.அவர் அவ்வாறு கருத்தை தெரிவித்தமை அவரது ஜனநாயக உரிமை அதுமட்டுமல்லாது தன்னிடம் இருந்து ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.இதனை ஏற்க முடியாத அமைச்சருடன் சென்ற சாரதி அவருடன் முரண்பட்டு அவரை தாக்கிய மை கண்டிக்கத்தக்க விடயம். தமிழ் மக்கள் ஜேவிபியிடம் கேள்வி கேட்க முடியாது அல்லது நாம் கூறுவதை கேட்க வேண்டும் இல்லாவிட்டால் தாக்குவோம் என்பதன் வெளிப்பாடு குறித்த மீனவர் சங்கத் தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் வெளிப்படுத்துகிறது.இலங்கை அரசியல் வரலாற்றில் இனங்களுக்கிடையில் இனவாதத்தை விதைத்தவர்களில் முன்னிலை வகிக்கும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி என்கின்ற கடந்த கால ஜேவிபி என்பதை யாரும் மறக்க மாட்டார்கள். வவுனியாக்கு வந்த ஜே.வி.பி  அமைச்சர் பிமல் ரத்நாயக்க தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாதிகள் என்ற அர்த்தத்தில் தனது கருத்துக்களை முன் வைத்தார். தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் தமிழ் தலைவர்கள் இனவாதிகள் என்றால் அந்த இனவாதத்தை நாங்கள் செய்வதற்கு தயாராக இருக்கிறோம். கடந்த தேர்தலில் தமிழ் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி பல மூன்று பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றினாலும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கட்சிகள் ஒற்றுமையின்மை என்ற காரணத்திற்காகவே அவர்களுக்கு வாக்களிக்க முற்பட்டார்கள் என்பதை உண்மை.தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில் ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தியினரை தமிழர் பகுதிகளில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும்.இவர்களை விரட்டாத விட்டால் உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ் மக்கள் தமக்கு ஆணை தந்து விட்டார்கள் என சர்வதேசத்திற்கு கூறி தமிழ் மக்களின் அரசியல் தீர்வை இல்லாது ஒழிப்பார்கள். ஆகவே தமிழ் மக்கள் நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜேவிபியினரை புறந்தள்ளி  சங்கு சின்னத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement