• May 01 2024

சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்குமாக இருந்தால் வரவேற்போம்- உமா சந்திரபிரகாஷ் கருத்து!

Sharmi / Dec 19th 2022, 12:59 pm
image

Advertisement

இலங்கையை முதலிடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற தூர நோக்கோடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் நலன் கருதி மக்களுக்காக ,குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். நாளை 20 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி பாடசாலை மாணவர்களுக்காக பஸ் வண்டியை எதிர்க்கடசித் தலைவர் சஜித் பிரேமதாச நேரடியாக வருகை தந்து கையளிக்க உள்ளார்.எனவே இவரை வட மாகாணம் சார்பாக வரவேற்று நிற்பதோடு மட்டுமன்றி எங்கள் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் உமா சந்திரபிரகாஷ் தெரிவித்தார்.

யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில் மாணவர் சமூகத்துக்கு இருக்கக்கூடிய முக்கிய பிரச்சினை என்று பார்க்கும் போது  போதை பொருள் பாவனை தொடர்பில் இலங்கை முழுவது மிக முக்கிய வேலைத்திட்டங்களை அரசும்,அதிகாரிகளும் செய்துகொண்டு வருகிறார்கள். இவ்வாறான திட்டங்களால் போதையால் சீரழியும் எங்கள் எதிர்கால சந்ததியினரை போதையில் இருந்து மீட்டு எடுக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் உங்களுக்கு  எங்களது நன்றிகள்.


இந்த போதைப்பொருட்கள் குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் ஊடுருவப்படுகிறது. விமானத்தின் மூலமும்,கடல் மார்க்கமாக படகுகள் மூலமும் நுழையக்கூடிய போதைப்பொருட்கள் இருக்கின்றன.எனவே இது ஒரு பெரிய வர்த்தகமாக இலங்கையில் இருக்கின்றன.இதை ஈடுபடுபவர்கள் முக்கிய பிரமுகர்களாக ,புள்ளிகளாக இருக்கின்றனர்.அவர்கள் மூலம் இதனை பல பேர் தொழிலாக செய்துகொண்டு இருக்கிறார்கள்.

எவ்வாறு வட இலங்கை ஊடாக தென்னிலங்கைக்கோ,அல்லது  தென்னிலங்கையில் இருந்து வட இலங்கைக்கோ போதைப்பொருள் கடத்தப்படுகிறது? இந்த போதைப்பொருட்கள் எங்கிருந்து வருகிறது என்று பொலிஸாருக்கு தெரியும்.எனவே கிலோ கணக்கில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவது முதலாவது இந்த அரசுக்கு கடமையாக இருக்கிறது.

மாணவர்களை தகுந்த முறையில் மீட்டுக்க வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு தேவை. இந்த போதைப்பொருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக  படம் காட்டி அரச வளங்களை துஸ்பிரயோகம் செய்யாமல் மிக முக்கியமான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது.

பிரதான வைத்தியசாலைகளில் மிக முக்கியமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருக்கிறன்றன .குறிப்பாக புற்றுநோயாளர்களுக்கான மருந்துகள் ஏனைய அதிதீவிர நோயில் இருப்பவர்க்ளுக்கான மருந்து தட்டுப்பாடு இருக்கிறது.சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கும் மருந்து இல்லை.எத்தனையோ நோயாளிகள் தங்களுடைய தங்க நகைகளை அடகு வைத்து அரச மருத்துவமனைகளுக்கு கொடுத்து தான் அவரச சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளுகிறார்கள்.

எனவே மருத்துவம் என்பது மக்களின் உயிர் நாடி .மக்ளுக்கான மருத்துவ தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பது தொடர்பான திட்டங்களை அரசு முறையாக உருவாக்க வேண்டும்.

மக்கள் ஆணை இழந்த இந்த அரசு  மக்களின் அபிவிருத்தி பற்றி பேசுவது?இன்னுமொரு தேர்தலின் பின் தான் மக்களின் ஆணை பெற்ற அரசு உருவாகும்.அதற்கு தான் மக்கள் நலன் சார்ந்து செயற்படுத்தவற்கான  ஆணை கிடைக்கும்.எனவே மக்கள் ஆணை இல்லாத நாட்டின் ஜனாதிபதியும் இந்த அரசும் நாட்டினை தவறாக வழி நடத்தி கொள்ளக்கூடாது என கூறிக்கொள்கிறோம்.

வருகின்ற சுதந்திர தினத்திற்கு தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்குமாக இருந்தால் அந்த விடயத்தினை வரவேற்கின்றோம்.ஆனால் அது நடக்காது.ஏனெனில் அவர்களை வெறுமனே காலத்தினை கடத்துவதற்காக இவ்வாறு அவர்கள் சொல்லுகிறார்கள்.ஆகவே தமிழ் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்குமாக இருந்தால் வரவேற்போம்- உமா சந்திரபிரகாஷ் கருத்து இலங்கையை முதலிடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற தூர நோக்கோடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் நலன் கருதி மக்களுக்காக ,குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். நாளை 20 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி பாடசாலை மாணவர்களுக்காக பஸ் வண்டியை எதிர்க்கடசித் தலைவர் சஜித் பிரேமதாச நேரடியாக வருகை தந்து கையளிக்க உள்ளார்.எனவே இவரை வட மாகாணம் சார்பாக வரவேற்று நிற்பதோடு மட்டுமன்றி எங்கள் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் உமா சந்திரபிரகாஷ் தெரிவித்தார்.யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,வட மாகாணத்தில் மாணவர் சமூகத்துக்கு இருக்கக்கூடிய முக்கிய பிரச்சினை என்று பார்க்கும் போது  போதை பொருள் பாவனை தொடர்பில் இலங்கை முழுவது மிக முக்கிய வேலைத்திட்டங்களை அரசும்,அதிகாரிகளும் செய்துகொண்டு வருகிறார்கள். இவ்வாறான திட்டங்களால் போதையால் சீரழியும் எங்கள் எதிர்கால சந்ததியினரை போதையில் இருந்து மீட்டு எடுக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் உங்களுக்கு  எங்களது நன்றிகள்.இந்த போதைப்பொருட்கள் குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் ஊடுருவப்படுகிறது. விமானத்தின் மூலமும்,கடல் மார்க்கமாக படகுகள் மூலமும் நுழையக்கூடிய போதைப்பொருட்கள் இருக்கின்றன.எனவே இது ஒரு பெரிய வர்த்தகமாக இலங்கையில் இருக்கின்றன.இதை ஈடுபடுபவர்கள் முக்கிய பிரமுகர்களாக ,புள்ளிகளாக இருக்கின்றனர்.அவர்கள் மூலம் இதனை பல பேர் தொழிலாக செய்துகொண்டு இருக்கிறார்கள்.எவ்வாறு வட இலங்கை ஊடாக தென்னிலங்கைக்கோ,அல்லது  தென்னிலங்கையில் இருந்து வட இலங்கைக்கோ போதைப்பொருள் கடத்தப்படுகிறது இந்த போதைப்பொருட்கள் எங்கிருந்து வருகிறது என்று பொலிஸாருக்கு தெரியும்.எனவே கிலோ கணக்கில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவது முதலாவது இந்த அரசுக்கு கடமையாக இருக்கிறது.மாணவர்களை தகுந்த முறையில் மீட்டுக்க வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு தேவை. இந்த போதைப்பொருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக  படம் காட்டி அரச வளங்களை துஸ்பிரயோகம் செய்யாமல் மிக முக்கியமான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது.பிரதான வைத்தியசாலைகளில் மிக முக்கியமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருக்கிறன்றன .குறிப்பாக புற்றுநோயாளர்களுக்கான மருந்துகள் ஏனைய அதிதீவிர நோயில் இருப்பவர்க்ளுக்கான மருந்து தட்டுப்பாடு இருக்கிறது.சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கும் மருந்து இல்லை.எத்தனையோ நோயாளிகள் தங்களுடைய தங்க நகைகளை அடகு வைத்து அரச மருத்துவமனைகளுக்கு கொடுத்து தான் அவரச சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளுகிறார்கள்.எனவே மருத்துவம் என்பது மக்களின் உயிர் நாடி .மக்ளுக்கான மருத்துவ தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பது தொடர்பான திட்டங்களை அரசு முறையாக உருவாக்க வேண்டும்.மக்கள் ஆணை இழந்த இந்த அரசு  மக்களின் அபிவிருத்தி பற்றி பேசுவதுஇன்னுமொரு தேர்தலின் பின் தான் மக்களின் ஆணை பெற்ற அரசு உருவாகும்.அதற்கு தான் மக்கள் நலன் சார்ந்து செயற்படுத்தவற்கான  ஆணை கிடைக்கும்.எனவே மக்கள் ஆணை இல்லாத நாட்டின் ஜனாதிபதியும் இந்த அரசும் நாட்டினை தவறாக வழி நடத்தி கொள்ளக்கூடாது என கூறிக்கொள்கிறோம்.வருகின்ற சுதந்திர தினத்திற்கு தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்குமாக இருந்தால் அந்த விடயத்தினை வரவேற்கின்றோம்.ஆனால் அது நடக்காது.ஏனெனில் அவர்களை வெறுமனே காலத்தினை கடத்துவதற்காக இவ்வாறு அவர்கள் சொல்லுகிறார்கள்.ஆகவே தமிழ் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement