• May 19 2024

பிரபாகரன் இல்லை என்றால் தீவகத்தில் மீண்டும் அடையாள அட்டை பதிவு செய்யும் முறை அமுல்படுத்தப்பட்டது ஏன்.? SamugamMedia

Sharmi / Mar 1st 2023, 3:30 pm
image

Advertisement

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிரோடு இல்லையென்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள நிலையில் எதற்காக தீவகத்தில் கடற்படையினரால் மீனவர்களை துன்புறுத்தும் வகையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வேலணை பிரதேச சபை உறுப்பினரும், தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளருமான கருணாகரன் நாவலன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் தமிழ்நாட்டில் நெடுமாறன் ஐயாவினால் வெளியிடப்பட்ட அறிவித்தலை தொடர்ந்து தீவகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏன் தீவீரப்படுத்தப்பட்டுள்ளதாக க.நாவலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா, ஊடரங்கு, மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு,  கடலட்டை பண்ணை போன்ற தொடர்ச்சியான இடையூறுகளால்  மீனவர்கள் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக க.நாவலன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடற்தொழிலுக்கு செல்ல முன்பு அடையாள அட்டை பதிவு செய்யும் முறை மீளவும் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு  தேவையற்ற விசாரணைகளும், இடையூறுகளும் கடற்படையினரால்  விளைவிக்கப்படுவதாக க.நாவலன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐம்பதுக்கு மேற்பட்ட மீனவர்கள் வேதனையடைந்து நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் தனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக கருணாகரன் நாவலன் தெரிவித்துள்ளார்.  

கடற்தொழில் அமைச்சராகவுள்ள டக்ளஸ் தேவானந்தாகவும் இந்த கெடுபிடிகளை கண்டுகொள்ளவில்லை என்றும் தமிழ்த்தேசிய பரப்பிலுள்ளஅனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும்  இந்த கெடுபிடிகளுக்கெதிராக உடனடியாக குரல் கொடுக்கவேண்டுமென்றும் க.நாவலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

கொரோனா , ஊடரங்கு , மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு ,  கடலட்டை பண்ணை போன்ற தொடர்ச்சியான இடையூறுகளால்  மீனவர்கள் துன்பப்படுகின்ற நிலையில் கடற் தொழிலுக்கு செல்ல முன்பு  அடையாள அட்டை பதிவு செய்யும் முறை மீளவும்  அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு  தேவையற்ற விசாரணைகளும் , இடையூறுகளும் கடற்படையினரால்  விளைவிக்கப்படுவதாக ஐம்பதுக்கு மேற்பட்ட  மீனவர்கள் வேதனையடைந்து  நேரடியாகவும் ,தொலைபேசி மூலமாகவும் தனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக வேலணை பிரதேச சபை உறுப்பினரும் , தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளருமான கருணாகரன் நாவலன்  தெரிவித்துள்ளார்.

கடற்தொழில் அமைச்சராக விளங்குகின்ற டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இக்கெடுபிடிகளை கண்டுகொள்ளவில்லை .தமிழ்த்தேசிய பரப்பிலுள்ள  அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும்  இக்கெடுபிடிகளுக்கெதிராக உடனடியாக குரல் கொடுக்கவேண்டுமென்று க.நாவலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

பிரபாகரன் இல்லை என்றால் தீவகத்தில் மீண்டும் அடையாள அட்டை பதிவு செய்யும் முறை அமுல்படுத்தப்பட்டது ஏன். SamugamMedia தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிரோடு இல்லையென்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள நிலையில் எதற்காக தீவகத்தில் கடற்படையினரால் மீனவர்களை துன்புறுத்தும் வகையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வேலணை பிரதேச சபை உறுப்பினரும், தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளருமான கருணாகரன் நாவலன் குற்றம் சுமத்தியுள்ளார்.அண்மையில் தமிழ்நாட்டில் நெடுமாறன் ஐயாவினால் வெளியிடப்பட்ட அறிவித்தலை தொடர்ந்து தீவகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏன் தீவீரப்படுத்தப்பட்டுள்ளதாக க.நாவலன் கேள்வி எழுப்பியுள்ளார்.கொரோனா, ஊடரங்கு, மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு,  கடலட்டை பண்ணை போன்ற தொடர்ச்சியான இடையூறுகளால்  மீனவர்கள் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக க.நாவலன் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் கடற்தொழிலுக்கு செல்ல முன்பு அடையாள அட்டை பதிவு செய்யும் முறை மீளவும் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு  தேவையற்ற விசாரணைகளும், இடையூறுகளும் கடற்படையினரால்  விளைவிக்கப்படுவதாக க.நாவலன் குற்றம் சுமத்தியுள்ளார்.ஐம்பதுக்கு மேற்பட்ட மீனவர்கள் வேதனையடைந்து நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் தனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக கருணாகரன் நாவலன் தெரிவித்துள்ளார்.  கடற்தொழில் அமைச்சராகவுள்ள டக்ளஸ் தேவானந்தாகவும் இந்த கெடுபிடிகளை கண்டுகொள்ளவில்லை என்றும் தமிழ்த்தேசிய பரப்பிலுள்ளஅனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும்  இந்த கெடுபிடிகளுக்கெதிராக உடனடியாக குரல் கொடுக்கவேண்டுமென்றும் க.நாவலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்கொரோனா , ஊடரங்கு , மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு ,  கடலட்டை பண்ணை போன்ற தொடர்ச்சியான இடையூறுகளால்  மீனவர்கள் துன்பப்படுகின்ற நிலையில் கடற் தொழிலுக்கு செல்ல முன்பு  அடையாள அட்டை பதிவு செய்யும் முறை மீளவும்  அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு  தேவையற்ற விசாரணைகளும் , இடையூறுகளும் கடற்படையினரால்  விளைவிக்கப்படுவதாக ஐம்பதுக்கு மேற்பட்ட  மீனவர்கள் வேதனையடைந்து  நேரடியாகவும் ,தொலைபேசி மூலமாகவும் தனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக வேலணை பிரதேச சபை உறுப்பினரும் , தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளருமான கருணாகரன் நாவலன்  தெரிவித்துள்ளார்.கடற்தொழில் அமைச்சராக விளங்குகின்ற டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இக்கெடுபிடிகளை கண்டுகொள்ளவில்லை .தமிழ்த்தேசிய பரப்பிலுள்ள  அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும்  இக்கெடுபிடிகளுக்கெதிராக உடனடியாக குரல் கொடுக்கவேண்டுமென்று க.நாவலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement