• Apr 17 2025

கட்டைக்காடு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி -13 பேர் கைது

Thansita / Apr 15th 2025, 7:33 pm
image

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட  13பேர் ஐந்து படகுகளுடன் கடற்படையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புக்களை கரையோரம் மற்றும் கடற்பரப்புகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையின் முகமாக இன்று காலை கட்டைக்காட்டு கடற்பரப்பில் ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த அதே பகுதியை சேர்ந்த 10 பேர் நான்கு படகுகளுடனும் உடமைகளுடனும் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்

மேலும் ஒரு படகு மூன்று பேருடன் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் அட்டைகளை அறுவடை செய்த போது கடற்படையால் கைது செய்யப்பட்டனர்

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்

சட்டவிரோத சுருக்குவலை தொழில் தடை எனவும் அதனை செய்பவர்கள் தொடர் நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்படுவார்கள் எனவும் வெற்றிலைக்கேணி கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டைக்காடு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி -13 பேர் கைது யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட  13பேர் ஐந்து படகுகளுடன் கடற்படையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புக்களை கரையோரம் மற்றும் கடற்பரப்புகளில் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நடவடிக்கையின் முகமாக இன்று காலை கட்டைக்காட்டு கடற்பரப்பில் ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த அதே பகுதியை சேர்ந்த 10 பேர் நான்கு படகுகளுடனும் உடமைகளுடனும் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்மேலும் ஒரு படகு மூன்று பேருடன் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் அட்டைகளை அறுவடை செய்த போது கடற்படையால் கைது செய்யப்பட்டனர்கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்சட்டவிரோத சுருக்குவலை தொழில் தடை எனவும் அதனை செய்பவர்கள் தொடர் நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்படுவார்கள் எனவும் வெற்றிலைக்கேணி கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement