• Oct 28 2024

கிளிநொச்சி கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு!

Tamil nila / Apr 7th 2024, 7:29 pm
image

Advertisement

கிளிநொச்சி கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக கிராம மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவிற்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்குமான எல்லைப்பகுதியில்  உள்ள விவசாய நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் தமது விவசாயத்தை அழித்து வருவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் 

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறை வைத்து காலபோகம் சிறுபோகம் செய்து வரும் விவசாயிகளின் விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் 30அடி ஆழத்தில் இருந்த ஆற்றுப்பகுதி தற்பொழுது 50அடிக்கும் மேலாக மணல் அகழ்வால் பாதிப்படைந்துள்ளது. இதனால அருகில் உள்ள வயல் நிலங்கள் இடிந்து விழுவதாகவும் தமது விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகவும்  தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பல தடைவைகள் புதுக்குடியிருப்பு பொலிசாரிடமும் தர்மபுர பொலிசாரிடமும் முறைப்பாடு செய்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும்  தமக்கான வாழ்வாதார நிலங்களை பாதுகாத்து தருமாறு கேட்டு நிற்கின்றனர்.



கிளிநொச்சி கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு கிளிநொச்சி கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக கிராம மக்களால் தெரிவிக்கப்படுகிறது.முல்லைத்தீவிற்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்குமான எல்லைப்பகுதியில்  உள்ள விவசாய நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் தமது விவசாயத்தை அழித்து வருவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறை வைத்து காலபோகம் சிறுபோகம் செய்து வரும் விவசாயிகளின் விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் 30அடி ஆழத்தில் இருந்த ஆற்றுப்பகுதி தற்பொழுது 50அடிக்கும் மேலாக மணல் அகழ்வால் பாதிப்படைந்துள்ளது. இதனால அருகில் உள்ள வயல் நிலங்கள் இடிந்து விழுவதாகவும் தமது விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகவும்  தெரிவிக்கின்றனர்.குறித்த சம்பவம் தொடர்பில் பல தடைவைகள் புதுக்குடியிருப்பு பொலிசாரிடமும் தர்மபுர பொலிசாரிடமும் முறைப்பாடு செய்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும்  தமக்கான வாழ்வாதார நிலங்களை பாதுகாத்து தருமாறு கேட்டு நிற்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement