• May 02 2024

2 லட்சத்து 75 ஆயிரம் இன்சுலின் மருந்து பொதிகள் இறக்குமதி – சுகாதார அமைச்சு அறிவிப்பு samugammedia

Chithra / Aug 23rd 2023, 10:02 am
image

Advertisement

நாட்டில் தட்டுப்பாட்டு நிலவிய 2 லட்சத்து 75 ஆயிரம்  இன்சுலின்(Insulin) மருந்து பொதிகள் இறக்குமதி 

செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட இன்சுலின் மருந்து பொதிகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மருந்து விநியோகத்துறையில் தட்டுப்பாடு நிலவும் மருந்துகளின் எண்ணிக்கை 231 ஆக குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாடு நிலவும் 38 வகையான மருந்துகள் அடுத்த இரு வாரங்களுக்குள் நாட்டிற்கு கிடைக்கும் என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் தற்போது 78 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.


2 லட்சத்து 75 ஆயிரம் இன்சுலின் மருந்து பொதிகள் இறக்குமதி – சுகாதார அமைச்சு அறிவிப்பு samugammedia நாட்டில் தட்டுப்பாட்டு நிலவிய 2 லட்சத்து 75 ஆயிரம்  இன்சுலின்(Insulin) மருந்து பொதிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட இன்சுலின் மருந்து பொதிகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, மருந்து விநியோகத்துறையில் தட்டுப்பாடு நிலவும் மருந்துகளின் எண்ணிக்கை 231 ஆக குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.தட்டுப்பாடு நிலவும் 38 வகையான மருந்துகள் அடுத்த இரு வாரங்களுக்குள் நாட்டிற்கு கிடைக்கும் என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் தற்போது 78 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement