• Apr 28 2024

சட்டவிராேதமான முறையில் மசகு எண்ணெய் இறக்குமதி: சபையில் குற்றச்சாட்டு samugammedia

Chithra / May 10th 2023, 7:58 am
image

Advertisement

சட்டமா அதிபரின் உத்தரவையும் மீறி அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட நிறுவனத்திற்கு புறம்பாக வேறு நிறுவனத்தின் ஊடாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சட்டவிராேதமான முறையில் மசகு எண்ணெய் கொண்டுவரப்பட்டிருக்கிறது எனவும் இதன் மூலம் பாரிய ஊழல் இடம்பெற்றிருக்கிறது என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது விஜித்த ஹேரத் மேலும் தெரிவிக்கையில், 

2022 டிசம்பர் 19 ஆம் திகதி அமைச்சரவையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரல் எனர்ஜி நிறுவனத்தின் சைபிரியன் லைட் ஊடாக 4 மாத காலங்களுக்காக மசகு எண்ணெய் இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 முதலாவது கப்பல் மார்ச் 25 ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்தது. 26 ஆம் திகதியளவில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருளை இறக்குகிறது.

ஆனால் கொரல் எனர்ஜி நிறுவனத்துடனேயே பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது. அந்த நிறுவனமே டென்டர் கோரிக்கையில் தகுதி பெற்றிருந்தது. 

இந்நிலையில் மார்ச் 25 ஆம் திகதி ஜுவலரி விலாசத்தில் உள்ள நிறுவனமொன்றின் ஊடாகவே எரிபொருள் வருகின்றது. வேறு நிறுவனத்தின் ஊடாக எப்படி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். இதில் பாரிய மோசடி நடந்துள்ளது.

இது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நகையகத்தின் பெயரில் கடந்த நவம்பர் மாதத்தில் பதிவு செய்யப்பட்டது என்று தூதரகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனத்திடமிருந்து எவ்வாறு  எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். இது முழுமையாக சட்டவிரோத கொடுக்கல் வாங்கலாகும் என்று தெரிவித்துள்ளார்.


சட்டவிராேதமான முறையில் மசகு எண்ணெய் இறக்குமதி: சபையில் குற்றச்சாட்டு samugammedia சட்டமா அதிபரின் உத்தரவையும் மீறி அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட நிறுவனத்திற்கு புறம்பாக வேறு நிறுவனத்தின் ஊடாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சட்டவிராேதமான முறையில் மசகு எண்ணெய் கொண்டுவரப்பட்டிருக்கிறது எனவும் இதன் மூலம் பாரிய ஊழல் இடம்பெற்றிருக்கிறது என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது விஜித்த ஹேரத் மேலும் தெரிவிக்கையில், 2022 டிசம்பர் 19 ஆம் திகதி அமைச்சரவையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரல் எனர்ஜி நிறுவனத்தின் சைபிரியன் லைட் ஊடாக 4 மாத காலங்களுக்காக மசகு எண்ணெய் இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  முதலாவது கப்பல் மார்ச் 25 ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்தது. 26 ஆம் திகதியளவில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருளை இறக்குகிறது.ஆனால் கொரல் எனர்ஜி நிறுவனத்துடனேயே பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது. அந்த நிறுவனமே டென்டர் கோரிக்கையில் தகுதி பெற்றிருந்தது. இந்நிலையில் மார்ச் 25 ஆம் திகதி ஜுவலரி விலாசத்தில் உள்ள நிறுவனமொன்றின் ஊடாகவே எரிபொருள் வருகின்றது. வேறு நிறுவனத்தின் ஊடாக எப்படி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். இதில் பாரிய மோசடி நடந்துள்ளது.இது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நகையகத்தின் பெயரில் கடந்த நவம்பர் மாதத்தில் பதிவு செய்யப்பட்டது என்று தூதரகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திடமிருந்து எவ்வாறு  எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். இது முழுமையாக சட்டவிரோத கொடுக்கல் வாங்கலாகும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement