• May 02 2024

எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! samugammedia

Chithra / Apr 12th 2023, 8:03 am
image

Advertisement

நுரைச்சோலை மின் நிலையத்தை இயக்குவதற்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

தமது பதிவில் மின் உற்பத்தி நிலையம் இயங்குவதற்கு எத்தனை நிலக்கரி சரக்குகள் தேவை என்பதை விரிவாக விவரித்துள்ளார். 

தேவையான இருப்புக்கள் வாங்கப்பட்டுள்ளன என்றும் உறுதியளித்துள்ளார். 


மேலும், 23வது நிலக்கரி கப்பல் தற்போது இறக்கப்பட்டுள்ள நிலையில், 24, 25 மற்றும் 26வது நிலக்கரி கப்பல்கள் புத்தளத்தில் தரித்து நிற்கும் நிலையில், தற்போது இறக்குவதற்கு காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், 27, 28 மற்றும் 29 நிலக்கரி கப்பல்கள் பரிந்துரைக்கப்பட்டு மே 01 ஆம் திகதிக்கு முன்னதாக வரவுள்ளன.

அதே நேரத்தில் 30 வது நிலக்கரி கப்பல் பரிந்துரைக்கப்பட உள்ளது மற்றும் மே முதல் வாரத்தில் வர திட்டமிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு samugammedia நுரைச்சோலை மின் நிலையத்தை இயக்குவதற்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமது பதிவில் மின் உற்பத்தி நிலையம் இயங்குவதற்கு எத்தனை நிலக்கரி சரக்குகள் தேவை என்பதை விரிவாக விவரித்துள்ளார். தேவையான இருப்புக்கள் வாங்கப்பட்டுள்ளன என்றும் உறுதியளித்துள்ளார். மேலும், 23வது நிலக்கரி கப்பல் தற்போது இறக்கப்பட்டுள்ள நிலையில், 24, 25 மற்றும் 26வது நிலக்கரி கப்பல்கள் புத்தளத்தில் தரித்து நிற்கும் நிலையில், தற்போது இறக்குவதற்கு காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 27, 28 மற்றும் 29 நிலக்கரி கப்பல்கள் பரிந்துரைக்கப்பட்டு மே 01 ஆம் திகதிக்கு முன்னதாக வரவுள்ளன.அதே நேரத்தில் 30 வது நிலக்கரி கப்பல் பரிந்துரைக்கப்பட உள்ளது மற்றும் மே முதல் வாரத்தில் வர திட்டமிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement