• Nov 23 2024

யாழ் மாநகர சபையின் முக்கிய அறிவித்தல்...!samugammedia

Sharmi / Dec 23rd 2023, 1:14 pm
image

யாழ்.மாநகரசபைக்குட்பட்ட 27 வட்டாரங்களுக்கான 2024ஆம் ஆண்டுக்குரிய ஆதன வரி அறிவித்தல்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரியிறுப்பாளர்கள் தமது ஆதனங்களுக்கான ஆதனவரியை ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஜனவரி 31 ஆம் திகதிக்குள் செலுத்தி 10 வீதக் கழிவையும், காலாண்டுக்கான ஆதனவரியை அக்காலாண்டின் முதல் மாதத்தில் செலுத்தி 5 வீதக் கழிவையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

வரியிறுப்பாளர்களின் நன்மை கருதி அலுவலக நாள்களில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 3 மணிவரையும் வார இறுதி நாள்களிலும் பொது விடுமுறை தினங்களிலும் (பொங்கல் தினம் தவிர்த்து) காலை 9 மணி தொடக்கம் மாலை 3 மணிவரையும் ஆதனவரியைச் செலுத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான ஆதனவரி அறிவித்தல் கிடைக்கப்பெறாதவர்கள், இதற்கு முன்னைய ஆண்டுக்கான ஆதனவரி அறிவித்தல் அல்லது முன்பு ஆதனவரி செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டு அல்லது ஆதனம் அமைந்துள்ள வட்டாரம். வீதி மற்றும் ஆதன இலக்கம் போன்ற விவரங்களை சமர்ப்பித்தும் ஆதனவரியைச் செலுத்தமுடியும் என்றும் ஆணையாளர் அறிவித்துள்ளார்.


யாழ் மாநகர சபையின் முக்கிய அறிவித்தல்.samugammedia யாழ்.மாநகரசபைக்குட்பட்ட 27 வட்டாரங்களுக்கான 2024ஆம் ஆண்டுக்குரிய ஆதன வரி அறிவித்தல்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,வரியிறுப்பாளர்கள் தமது ஆதனங்களுக்கான ஆதனவரியை ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஜனவரி 31 ஆம் திகதிக்குள் செலுத்தி 10 வீதக் கழிவையும், காலாண்டுக்கான ஆதனவரியை அக்காலாண்டின் முதல் மாதத்தில் செலுத்தி 5 வீதக் கழிவையும் பெற்றுக்கொள்ளமுடியும். வரியிறுப்பாளர்களின் நன்மை கருதி அலுவலக நாள்களில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 3 மணிவரையும் வார இறுதி நாள்களிலும் பொது விடுமுறை தினங்களிலும் (பொங்கல் தினம் தவிர்த்து) காலை 9 மணி தொடக்கம் மாலை 3 மணிவரையும் ஆதனவரியைச் செலுத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான ஆதனவரி அறிவித்தல் கிடைக்கப்பெறாதவர்கள், இதற்கு முன்னைய ஆண்டுக்கான ஆதனவரி அறிவித்தல் அல்லது முன்பு ஆதனவரி செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டு அல்லது ஆதனம் அமைந்துள்ள வட்டாரம். வீதி மற்றும் ஆதன இலக்கம் போன்ற விவரங்களை சமர்ப்பித்தும் ஆதனவரியைச் செலுத்தமுடியும் என்றும் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement