• Sep 17 2024

இலங்கை தமிழரசுக் கட்சி - கிளிநொச்சி கிளையின் முக்கிய அறிவித்தல்!

Tamil nila / Dec 26th 2022, 10:23 pm
image

Advertisement

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களில் கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சிப் பிரதேச சபை, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை, பூநகரிப் பிரதேசசபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகையின் கீழுள்ள வட்டாரங்களில், வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கு ஆர்வமுடைய ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் வின்னப்பங்கள் கோரப்படுகின்றன.


விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள்


1.18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல்.


2. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்புரிமை பெற்றவராக இருத்தல்.


3. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை நிலைப்பாடுகளின் வழி, தமிழ்த்தேசியப் பயணத்திலும், பணிகளிலும் தன்னை முழுமையாக இணைத்துக்கொள்ளும் ஆர்வமும், தனது சுய விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பால் மக்கள் பணிகளில் ஈடுபடும் மனப்பாங்கும் உடையவராக இருத்தல்.


5. சமூகநேயப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் மனோநிலை, சுய ஒழுக்கம், முன்னுதாரண நடத்தைகள், பொதுப் பணிகள் என்பவற்றின் அடிப்படையில் தனது வட்டார மக்களால் நன்கு அறியப்பட்டவராகவும், மக்கள் மத்தியில் நன்மதிப்பு உடையவராகவும் இருத்தல்.


* விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பப் படிவங்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான "அறிவகத்தில் (கந்தசாமி கோவில் முன்பாக, கண்டி வீதி, கிளிநொச்சி) 2022.12.26 - 2023.01.02 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் (ஞாயிறு தவிர்ந்த) மு.ப .9.00 - பி.ப.4.00 மணிவரை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.


* பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, தங்களின் சுயவிபரக் கோவை மற்றும், படிவத்தில் கோரப்பட்ட ஆவணங்களோடு இணைத்து எதிர்வரும் 2022.01.05 ஆம் திகதி, வியாழக்கிழமை, நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் கிடைக்கத்தக்கதாக செயலாளர், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக்கிளை, "அறிவகம்" , கந்தசாமி கோவில் முன்பாக, கண்டி வீதி, கிளிநொச்சி என்னும் முகவரிக்கு நோடியாகவோ, பதிவுத் தபால் மூலமாகவோ அனுப்பிவைக்க முடியும்.


* விண்ணப்பப் படிவங்களை உரிய காலப்பகுதியில் முறைப்படி சமர்ப்பிப்பதன் மூலம், விண்ணப்பித்தவர்கள் அனைவரும் வேட்பாளர்களாகப் போட்டியிடத் தகுதியுடையவர்கள் எனக் கருத முடியாது. இதுவிடயத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - கிளிநொச்சி மாவட்டக் கிளையின் முடிவே இறுதியானதாகும்.


மொத்த வேட்பாளர் எண்ணிக்கையில் 25% பெண்களுக்கும், 25% இளைஞர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என்பதையும் கவனத்திற்கொள்ளவும்.


இலங்கை தமிழரசுக் கட்சி - கிளிநொச்சி கிளையின் முக்கிய அறிவித்தல் 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களில் கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சிப் பிரதேச சபை, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை, பூநகரிப் பிரதேசசபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகையின் கீழுள்ள வட்டாரங்களில், வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கு ஆர்வமுடைய ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் வின்னப்பங்கள் கோரப்படுகின்றன.விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள்1.18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல்.2. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்புரிமை பெற்றவராக இருத்தல்.3. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை நிலைப்பாடுகளின் வழி, தமிழ்த்தேசியப் பயணத்திலும், பணிகளிலும் தன்னை முழுமையாக இணைத்துக்கொள்ளும் ஆர்வமும், தனது சுய விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பால் மக்கள் பணிகளில் ஈடுபடும் மனப்பாங்கும் உடையவராக இருத்தல்.5. சமூகநேயப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் மனோநிலை, சுய ஒழுக்கம், முன்னுதாரண நடத்தைகள், பொதுப் பணிகள் என்பவற்றின் அடிப்படையில் தனது வட்டார மக்களால் நன்கு அறியப்பட்டவராகவும், மக்கள் மத்தியில் நன்மதிப்பு உடையவராகவும் இருத்தல்.* விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பப் படிவங்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான "அறிவகத்தில் (கந்தசாமி கோவில் முன்பாக, கண்டி வீதி, கிளிநொச்சி) 2022.12.26 - 2023.01.02 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் (ஞாயிறு தவிர்ந்த) மு.ப .9.00 - பி.ப.4.00 மணிவரை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.* பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, தங்களின் சுயவிபரக் கோவை மற்றும், படிவத்தில் கோரப்பட்ட ஆவணங்களோடு இணைத்து எதிர்வரும் 2022.01.05 ஆம் திகதி, வியாழக்கிழமை, நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் கிடைக்கத்தக்கதாக செயலாளர், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக்கிளை, "அறிவகம்" , கந்தசாமி கோவில் முன்பாக, கண்டி வீதி, கிளிநொச்சி என்னும் முகவரிக்கு நோடியாகவோ, பதிவுத் தபால் மூலமாகவோ அனுப்பிவைக்க முடியும்.* விண்ணப்பப் படிவங்களை உரிய காலப்பகுதியில் முறைப்படி சமர்ப்பிப்பதன் மூலம், விண்ணப்பித்தவர்கள் அனைவரும் வேட்பாளர்களாகப் போட்டியிடத் தகுதியுடையவர்கள் எனக் கருத முடியாது. இதுவிடயத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - கிளிநொச்சி மாவட்டக் கிளையின் முடிவே இறுதியானதாகும்.மொத்த வேட்பாளர் எண்ணிக்கையில் 25% பெண்களுக்கும், 25% இளைஞர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என்பதையும் கவனத்திற்கொள்ளவும்.

Advertisement

Advertisement

Advertisement