• May 03 2024

எரிவாயு விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..! samugammedia

Chithra / Jul 27th 2023, 12:29 pm
image

Advertisement


நாட்டில் உள்ள இரண்டு உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களும் ஒரே விலையில் எரிவாயுவை விற்பனை செய்வது குறித்து அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கான உள்நாட்டு எரிவாயு விநியோகம் நுகர்வோர் உரிமைகளை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ள அவர்,

அண்மைக் காலங்களில் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது பெரும்பாலான பொருட்களின் விலைகளை குறிப்பிட்ட நிலையான மட்டத்தில் பராமரிக்க முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டிலுள்ள இரண்டு எரிவாயு இறக்குமதி நிறுவனங்களும் தமது விலை திருத்தத்தின் மூலம் நுகர்வோருக்கு பாரிய அநீதி இழைத்துள்ளதாகவும், இரு நிறுவனங்களினதும் உள்நாட்டு எரிவாயுக்கான ஒரே விலைகள் குறித்து எதிர்வரும் வாரத்திற்குள் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


எரிவாயு விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு. samugammedia நாட்டில் உள்ள இரண்டு உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களும் ஒரே விலையில் எரிவாயுவை விற்பனை செய்வது குறித்து அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.நாட்டிற்கான உள்நாட்டு எரிவாயு விநியோகம் நுகர்வோர் உரிமைகளை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ள அவர்,அண்மைக் காலங்களில் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது பெரும்பாலான பொருட்களின் விலைகளை குறிப்பிட்ட நிலையான மட்டத்தில் பராமரிக்க முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எவ்வாறாயினும், நாட்டிலுள்ள இரண்டு எரிவாயு இறக்குமதி நிறுவனங்களும் தமது விலை திருத்தத்தின் மூலம் நுகர்வோருக்கு பாரிய அநீதி இழைத்துள்ளதாகவும், இரு நிறுவனங்களினதும் உள்நாட்டு எரிவாயுக்கான ஒரே விலைகள் குறித்து எதிர்வரும் வாரத்திற்குள் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement