• May 02 2024

50 வருட வரலாற்றில் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் கணக்கான வருமானம்

Chithra / Feb 6th 2023, 7:06 am
image

Advertisement

ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் விவசாய பயிர்கள் மற்றும் மசாலாப்பொருட்களின் ஏற்றுமதி மூலம் 455.73 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 16,000 கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜானக லிந்தர, திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். 

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த சில தசாப்தங்களாக  வாசனை திரவியங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கைக்கு பாரிய அளவிலான அந்நியச் செலாவணியை ஈட்ட முடிந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில், மசாலாப் பொருட்களின் ஏற்றுமதி மூலம் 1,60,000 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்ட முடிந்தது. 50 வருட வரலாற்றைக் கொண்ட விவசாயத் திணைக்களத்தின் வரலாற்றில் அதிக ஏற்றுமதி வருமானம் 2021 ஆம் ஆண்டு ஈட்டப்பட்டது.

2022 ஆம் ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த போது விவசாய பயிர்கள் மற்றும் வாசனை திரவியங்கள் ஏற்றுமதி மூலம் 455.73 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.


குறிப்பாக வெளிநாடுகளில் இலங்கையின் இலவங்கப்பட்டைக்கு அதிக கிராக்கி இருப்பதாகவும், 18,600 மெற்றிக் தொன் இலவங்கப்பட்டை மற்றும் உலர் இலவங்கப்பட்டை இலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு 217.50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும், மிளகு 11,415.65 மெற்றிக் தொன் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2022ல் 1856.71 மெட்ரிக் டன் கிராம்பு ஏற்றுமதி மூலம் 18.03 மில்லியன் டொலர் வருமானமும், 2.14 மெட்ரிக் டன் ஏலக்காய் ஏற்றுமதி மூலம் 0.14 மில்லியன் டொலர்களும், ஏற்றுமதி மூலம் 1978.89 மெட்ரிக் டன் வருமானமும்,ஜாதிக்காய் மூலம் 12.75 மில்லியன் டொலர்கள் வருமானமும் கிடைத்துள்ளது.

இதற்கமைய, 2023ஆம் ஆண்டில் 600 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் அபிவிருத்திப் பணிப்பாளர் ஜனக லிந்தர தெரிவித்துள்ளார்.

50 வருட வரலாற்றில் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் கணக்கான வருமானம் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் விவசாய பயிர்கள் மற்றும் மசாலாப்பொருட்களின் ஏற்றுமதி மூலம் 455.73 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 16,000 கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜானக லிந்தர, திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,கடந்த சில தசாப்தங்களாக  வாசனை திரவியங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கைக்கு பாரிய அளவிலான அந்நியச் செலாவணியை ஈட்ட முடிந்துள்ளது.2022 ஆம் ஆண்டில், மசாலாப் பொருட்களின் ஏற்றுமதி மூலம் 1,60,000 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்ட முடிந்தது. 50 வருட வரலாற்றைக் கொண்ட விவசாயத் திணைக்களத்தின் வரலாற்றில் அதிக ஏற்றுமதி வருமானம் 2021 ஆம் ஆண்டு ஈட்டப்பட்டது.2022 ஆம் ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த போது விவசாய பயிர்கள் மற்றும் வாசனை திரவியங்கள் ஏற்றுமதி மூலம் 455.73 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.குறிப்பாக வெளிநாடுகளில் இலங்கையின் இலவங்கப்பட்டைக்கு அதிக கிராக்கி இருப்பதாகவும், 18,600 மெற்றிக் தொன் இலவங்கப்பட்டை மற்றும் உலர் இலவங்கப்பட்டை இலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு 217.50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும், மிளகு 11,415.65 மெற்றிக் தொன் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், 2022ல் 1856.71 மெட்ரிக் டன் கிராம்பு ஏற்றுமதி மூலம் 18.03 மில்லியன் டொலர் வருமானமும், 2.14 மெட்ரிக் டன் ஏலக்காய் ஏற்றுமதி மூலம் 0.14 மில்லியன் டொலர்களும், ஏற்றுமதி மூலம் 1978.89 மெட்ரிக் டன் வருமானமும்,ஜாதிக்காய் மூலம் 12.75 மில்லியன் டொலர்கள் வருமானமும் கிடைத்துள்ளது.இதற்கமைய, 2023ஆம் ஆண்டில் 600 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் அபிவிருத்திப் பணிப்பாளர் ஜனக லிந்தர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement