• Aug 15 2025

இலங்கையில் இன்று காலை அடுத்தடுத்து கோர விபத்து; பலரின் நிலை கவலைக்கிடம்

Chithra / Aug 15th 2025, 10:30 am
image

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த வளைவுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். 

இவ் விபத்து இன்று (15) காலை இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹாலி எல உடுவர பகுதியைச் சேர்ந்த குழுவொன்றை ஏற்றிச் சென்ற தனியார் யாத்திரை பேருந்து, கண்டி நோக்கிச் சென்றபோது, துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தில் 30 பேர் பயணித்துள்ள நிலையில் காயமடைந்தவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த  பலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனமும் ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. 

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 6 பேர் காயமடைந்த நிலையில், தெமோதரை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காயமடைந்தவர்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன்,

சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் இன்று காலை அடுத்தடுத்து கோர விபத்து; பலரின் நிலை கவலைக்கிடம் பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த வளைவுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து இன்று (15) காலை இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹாலி எல உடுவர பகுதியைச் சேர்ந்த குழுவொன்றை ஏற்றிச் சென்ற தனியார் யாத்திரை பேருந்து, கண்டி நோக்கிச் சென்றபோது, துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.பேருந்தில் 30 பேர் பயணித்துள்ள நிலையில் காயமடைந்தவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.காயமடைந்த  பலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனமும் ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 6 பேர் காயமடைந்த நிலையில், தெமோதரை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன்,சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement