• May 17 2024

வடமராட்சி கிழக்கில் நேவியின் சோதனையின் பின்னரே கடலுக்குள் செல்லமுடியும் - கொந்தளித்த மீனவர்கள்.! samugammedia

Tamil nila / Mar 29th 2023, 5:42 pm
image

Advertisement

வடமராட்சி கிழக்கில் சுருக்கு வலையை கட்டுப்படுத்த முடியாத கடற்படையினர் வேண்டாம் என்றும் இராணுவத்தை இதற்கு பயன்படுத்துமாறு பொது மகன் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.


கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கணவனை இழந்த மற்றும் ஊனமற்றவர்கள் சுமார் 2000 ஆயிரம் பேர் உள்ளதாகவும் அவர்கள் வாழ வழியின்றி சாகும் நிலையில் உள்ளதாக கூட்டத்தின் போது மீனவர் ஒருவர் இவ்வாறு ஆதங்கம் வெளியிட்டிருந்தார்.


மீனவர்கள் இன்று உணவுக்கு வழியின்றி சாகும் தறுவாயில் உள்ளதாக மீனவர் குறிப்பிட்டுள்ளார்.

சுருக்குவலையில் ஈடுபட்டவர்கள் பிடிபட்டால் 7 நாளைக்கு பின்னரே நீதிமன்றநத்தில் மாரப்படுத்தப்படுவதாகவும் ஏன் பிடிபட்ட அன்றே நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படுவதில்லை என கேள்வி எழுப்பபட்டிருந்தது.


இந்நிலையில் வடமராட்சி கிழக்கில் தடை செய்யப்பட்டுள்ள சுருக்கு வலையை மீன்பிடியை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையின் சோதனை முகாமினை தாண்டியே கடலுக்கு செல்லமுடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்த நடைமுறை நாளை தொடக்கம் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் உறுதியளித்துள்ளார்.


இதேவேளை கரவெட்டடிப் பகுதியில் பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வெறுமையாக வருகின்ற வாகனங்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டள்ளது.


அத்துடன் விடுகளில் உள்ள பொருட்களும் களவாடப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

கரவெட்டி பிரேதேச செயலாளரினால் இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் இவ்வாறு வெற்று வாகனங்களை தடை செய்வது பொருத்தமற்றது எனவும் பொருட்களை கொள்வனவு செய்து வெளியில் செல்லுகின்ற வாகனங்களை இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து சோதனை செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

.

யாழ் மாவட்டத்தில் போதை பொருள் பாவனையினை கட்டுப்படுத்தல் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று யாழ் மாவட்ட செயலககேட்போர் கூடத்தில் நடைபெற்று வரகின்றது. இதன்போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கில் நேவியின் சோதனையின் பின்னரே கடலுக்குள் செல்லமுடியும் - கொந்தளித்த மீனவர்கள். samugammedia வடமராட்சி கிழக்கில் சுருக்கு வலையை கட்டுப்படுத்த முடியாத கடற்படையினர் வேண்டாம் என்றும் இராணுவத்தை இதற்கு பயன்படுத்துமாறு பொது மகன் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கணவனை இழந்த மற்றும் ஊனமற்றவர்கள் சுமார் 2000 ஆயிரம் பேர் உள்ளதாகவும் அவர்கள் வாழ வழியின்றி சாகும் நிலையில் உள்ளதாக கூட்டத்தின் போது மீனவர் ஒருவர் இவ்வாறு ஆதங்கம் வெளியிட்டிருந்தார்.மீனவர்கள் இன்று உணவுக்கு வழியின்றி சாகும் தறுவாயில் உள்ளதாக மீனவர் குறிப்பிட்டுள்ளார்.சுருக்குவலையில் ஈடுபட்டவர்கள் பிடிபட்டால் 7 நாளைக்கு பின்னரே நீதிமன்றநத்தில் மாரப்படுத்தப்படுவதாகவும் ஏன் பிடிபட்ட அன்றே நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படுவதில்லை என கேள்வி எழுப்பபட்டிருந்தது.இந்நிலையில் வடமராட்சி கிழக்கில் தடை செய்யப்பட்டுள்ள சுருக்கு வலையை மீன்பிடியை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையின் சோதனை முகாமினை தாண்டியே கடலுக்கு செல்லமுடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறை நாளை தொடக்கம் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் உறுதியளித்துள்ளார்.இதேவேளை கரவெட்டடிப் பகுதியில் பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வெறுமையாக வருகின்ற வாகனங்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டள்ளது.அத்துடன் விடுகளில் உள்ள பொருட்களும் களவாடப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.கரவெட்டி பிரேதேச செயலாளரினால் இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இவ்வாறு வெற்று வாகனங்களை தடை செய்வது பொருத்தமற்றது எனவும் பொருட்களை கொள்வனவு செய்து வெளியில் செல்லுகின்ற வாகனங்களை இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து சோதனை செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.யாழ் மாவட்டத்தில் போதை பொருள் பாவனையினை கட்டுப்படுத்தல் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று யாழ் மாவட்ட செயலககேட்போர் கூடத்தில் நடைபெற்று வரகின்றது. இதன்போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement