• Sep 17 2024

யாழில், பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் கேயுவி கார்!

Tamil nila / Dec 23rd 2022, 9:26 pm
image

Advertisement

இலங்கைக்கு பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் கேயுவி (KUV 100 Nxt) கார் தற்போது யாழ்ப்பாணத்தில் விற்பனையாகி வருகிறது.


மகேந்திர நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் மாத்தறையிலுள்ள பிரதேசமொன்றில் தொழிற்சாலையை நிறுவி காரின் பாகங்களை இறக்குமதி செய்து  பொருத்தி வருகிறோமென ஐடியல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வடக்கு கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் சி.சரவணன் தெரிவித்தார்.


கேயுவி(KUV 100 Nxt) காரே இந்த தொழிற்சாலை ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற போதே இதனை தெரிவித்தார்.



2009ஆம் ஆண்டு முதல் மகேந்திரா வாகனத்தை இலங்கையில் விநியோகம் செய்து வருகிறோம். இது வரையில் சுமார் ஒரு இலட்சம் வரையிலான பல தரப்பட்ட வாகனங்களை விநியோகித்துள்ளோம்.


மகேந்திரா நிறுவனம் இந்தியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்பட்டு வருகின்றனர்.


இந்த வாகனம் சாதாரண விலையில் நடுத்தர குடும்பத்தாரும் கொள்வனவு செய்ய கூடிய நிலையில் தான் அறிமுகப்படுத்தினோம். அப்போது 30 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவே. பொருளாதார நிலைமை டொலர் அதிகரிப்பால் விலை மேலும் உயர்வடைந்தது.


வரிவிலக்களிப்பு வாகன அனுமதிப் பத்திரங்கள் உடையவர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் வாகனத்தை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்குமென கிளைப் பொறுப்பதிகாரி ஐடியல் மோட்டார்ஸ் இன் யாழ்ப்பாணக் கிளைப் பொறுப்பதிகாரி சி.சகிலன் தெரிவித்தார்.


மூன்று வருடம் ஒரு இலட்சம் கிலோ மீற்றருக்கு உத்தரவாதம் உண்டு. இந்த வாகனத்துக்கு யாழ்ப்பாணத்தில் உதிரிப்பாகங்கள் காட்சியறைகள் திருத்தகங்கள் உண்டு. இலங்கையில் 2000 வரையும் யாழில் 100 வரையும் வாகனங்களை இதுவரை விற்பனை செய்துள்ளோம் என்றார்.




யாழில், பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் கேயுவி கார் இலங்கைக்கு பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் கேயுவி (KUV 100 Nxt) கார் தற்போது யாழ்ப்பாணத்தில் விற்பனையாகி வருகிறது.மகேந்திர நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் மாத்தறையிலுள்ள பிரதேசமொன்றில் தொழிற்சாலையை நிறுவி காரின் பாகங்களை இறக்குமதி செய்து  பொருத்தி வருகிறோமென ஐடியல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வடக்கு கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் சி.சரவணன் தெரிவித்தார்.கேயுவி(KUV 100 Nxt) காரே இந்த தொழிற்சாலை ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற போதே இதனை தெரிவித்தார்.2009ஆம் ஆண்டு முதல் மகேந்திரா வாகனத்தை இலங்கையில் விநியோகம் செய்து வருகிறோம். இது வரையில் சுமார் ஒரு இலட்சம் வரையிலான பல தரப்பட்ட வாகனங்களை விநியோகித்துள்ளோம்.மகேந்திரா நிறுவனம் இந்தியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்பட்டு வருகின்றனர்.இந்த வாகனம் சாதாரண விலையில் நடுத்தர குடும்பத்தாரும் கொள்வனவு செய்ய கூடிய நிலையில் தான் அறிமுகப்படுத்தினோம். அப்போது 30 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவே. பொருளாதார நிலைமை டொலர் அதிகரிப்பால் விலை மேலும் உயர்வடைந்தது.வரிவிலக்களிப்பு வாகன அனுமதிப் பத்திரங்கள் உடையவர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் வாகனத்தை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்குமென கிளைப் பொறுப்பதிகாரி ஐடியல் மோட்டார்ஸ் இன் யாழ்ப்பாணக் கிளைப் பொறுப்பதிகாரி சி.சகிலன் தெரிவித்தார்.மூன்று வருடம் ஒரு இலட்சம் கிலோ மீற்றருக்கு உத்தரவாதம் உண்டு. இந்த வாகனத்துக்கு யாழ்ப்பாணத்தில் உதிரிப்பாகங்கள் காட்சியறைகள் திருத்தகங்கள் உண்டு. இலங்கையில் 2000 வரையும் யாழில் 100 வரையும் வாகனங்களை இதுவரை விற்பனை செய்துள்ளோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement