• May 13 2024

யாழில், கட்சியின் பெயரை மாற்றிய சஜித்? - மக்களும் நீண்ட நேரம் காத்திருப்பு! SamugamMedia

Tamil nila / Feb 23rd 2023, 5:16 pm
image

Advertisement

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.




அந்தவகையில், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவரது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்று வருகிறது.



அந்தவகையில் யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் - கொம்பனிப்புலம் பகுதியிலும் அவரது பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அந்தக் கூட்டத்தில் மேடையின் பின்புலத்தில் கட்டப்பட்டிருந்த காட்சிப் பதாகையில் "ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயர் ஐக்கிய மக்கள் கட்சி என மாற்றம் செய்யப்பட்டிருந்தது.



இவ்வாறான செயற்பாட்டை பார்வையிட்ட மக்கள் "கட்சியின் பெயர் மாற்றப்பட்டுள்ளதா? , கட்சியின் பெயரே தெரியாதவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு என்ன செய்வார்கள்" என முணுமுணுத்ததை அவதானிக்க முடிந்தது.


அத்துடன் குறித்த பிரச்சாரக் கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு என அறிவிக்கப்பட்டிருந்த போதும் அவர் 3.30 மணிக்கு பிறகே கூட்டத்தில் பங்குபற்றினார். இதனால் கூட்டத்திற்கு வந்த மக்கள் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.


யாழில், கட்சியின் பெயரை மாற்றிய சஜித் - மக்களும் நீண்ட நேரம் காத்திருப்பு SamugamMedia எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.அந்தவகையில், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவரது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்று வருகிறது.அந்தவகையில் யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் - கொம்பனிப்புலம் பகுதியிலும் அவரது பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்தக் கூட்டத்தில் மேடையின் பின்புலத்தில் கட்டப்பட்டிருந்த காட்சிப் பதாகையில் "ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயர் ஐக்கிய மக்கள் கட்சி என மாற்றம் செய்யப்பட்டிருந்தது.இவ்வாறான செயற்பாட்டை பார்வையிட்ட மக்கள் "கட்சியின் பெயர் மாற்றப்பட்டுள்ளதா , கட்சியின் பெயரே தெரியாதவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு என்ன செய்வார்கள்" என முணுமுணுத்ததை அவதானிக்க முடிந்தது.அத்துடன் குறித்த பிரச்சாரக் கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு என அறிவிக்கப்பட்டிருந்த போதும் அவர் 3.30 மணிக்கு பிறகே கூட்டத்தில் பங்குபற்றினார். இதனால் கூட்டத்திற்கு வந்த மக்கள் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement