• Apr 27 2024

யாழ்.கோம்பயன் மணல் இந்து மயானத்தில் புதிய எரியூட்டி திறந்துவைப்பு...!

Sharmi / Mar 29th 2024, 4:18 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக கோம்பயன் மணல் இந்து மயானத்தில் புதிய எரியூட்டி  இன்று(29)  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட குறித்த எரியூட்டி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால்  இன்று(29)  காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது

யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி காணப்பட்டது.

இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன் மணல் இந்து மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


யாழ்.கோம்பயன் மணல் இந்து மயானத்தில் புதிய எரியூட்டி திறந்துவைப்பு. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக கோம்பயன் மணல் இந்து மயானத்தில் புதிய எரியூட்டி  இன்று(29)  திறந்து வைக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட குறித்த எரியூட்டி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால்  இன்று(29)  காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டதுயாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி காணப்பட்டது.இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன் மணல் இந்து மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement