• Nov 24 2024

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை - 3,432 பேர் பாதிப்பு - வெள்ளப்பெருக்கு அபாயம்

Chithra / Aug 21st 2024, 12:57 pm
image


சீரற்ற காலநிலை காரணமாக 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி களுத்துறை, புத்தளம், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதேவேளை, மழையுடன் வீசிய கடுங் காற்று காரணமாகக் குறித்த பகுதிகளில் உள்ள 76 வீடுகளுக்குப் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் புளத்சிங்ஹல - மில்லகந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மாகுர பகுதியிலும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

தொடரும் மழையுடனான வானிலையால் ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழில் பொய்துவரும் மழையுடன் கூடிய காற்று காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் பறந்து சென்றுள்ளதால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் நகரை அண்மித்த குருநகர் தொடர்மாடி குடியிருப்பில் பெருமளவிலான குடும்பங்கள் வசித்து வருகிற நிலையில் அக்குடியிருப்பின் மேற்கூரைகளே கடும் காற்றினால் பறந்து சென்றுள்ளன.


நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை - 3,432 பேர் பாதிப்பு - வெள்ளப்பெருக்கு அபாயம் சீரற்ற காலநிலை காரணமாக 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.அதன்படி களுத்துறை, புத்தளம், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்இதேவேளை, மழையுடன் வீசிய கடுங் காற்று காரணமாகக் குறித்த பகுதிகளில் உள்ள 76 வீடுகளுக்குப் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் புளத்சிங்ஹல - மில்லகந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அத்துடன், மாகுர பகுதியிலும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.தொடரும் மழையுடனான வானிலையால் ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.மேலும் யாழில் பொய்துவரும் மழையுடன் கூடிய காற்று காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் பறந்து சென்றுள்ளதால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.யாழ் நகரை அண்மித்த குருநகர் தொடர்மாடி குடியிருப்பில் பெருமளவிலான குடும்பங்கள் வசித்து வருகிற நிலையில் அக்குடியிருப்பின் மேற்கூரைகளே கடும் காற்றினால் பறந்து சென்றுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement