• Jan 16 2025

அதிகரிக்கப்படவுள்ள அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகை!

Chithra / Jan 16th 2025, 7:17 am
image

 

நாட்டில் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன்போது, மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும் பதினைந்தாயிரம் ரூபாய் உதவித்தொகையை பதினேழாயிரத்து ஐநூறு ரூபவாகவும், 

எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கும் குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐயாயிரம் ரூபாய் வழங்கும் குடும்பங்களுகு அந்தத் தொகை மாறாமல் வழங்குவதற்கும் குழு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இவ்வாண்டு இறுதி வரை அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய நலன்புரி கொடுப்பனவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதிகரிக்கப்படவுள்ள அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகை  நாட்டில் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.இதன்போது, மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும் பதினைந்தாயிரம் ரூபாய் உதவித்தொகையை பதினேழாயிரத்து ஐநூறு ரூபவாகவும், எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கும் குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஐயாயிரம் ரூபாய் வழங்கும் குடும்பங்களுகு அந்தத் தொகை மாறாமல் வழங்குவதற்கும் குழு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.மேலும், இவ்வாண்டு இறுதி வரை அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய நலன்புரி கொடுப்பனவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement