• May 10 2024

அரசாங்கத்திற்குள் அதிகரித்த மோதல்கள்..! 20இராஜாங்க அமைச்சர்கள் ராஜினாமா..?? ரணிலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.!samugammedia

Sharmi / May 28th 2023, 11:53 am
image

Advertisement

அமைச்சரவை அமைச்சர்களின் கீழ்லுள்ள நிறுவனங்களின் பொறுப்புகளை, இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்காததால்
பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில அமைச்சர்களுக்கு இரண்டு, மூன்று அமைச்சுக்கள் என பத்து பதினைந்து நிறுவனங்கள் இருந்தாலும், ஓரிரு சிறு நிறுவனங்களைத் தவிர, அரச அமைச்சர்களுக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அமைச்சுக்களுக்குச் சென்று சும்மா வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பல இராஜாங்க அமைச்சர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அமைச்சுக்களில் பொறுப்புகள் வழங்கப்படாமையால் சில அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் கருத்து மோதல்களும் உருவாகியுள்ளதாக அறியமுடிகின்றது.
இரசாங்கத்தில் தற்போது 20 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 38 இராஜாங்க அமைச்சர்களும் பதவி வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
முப்பத்தெட்டு இராஜாங்க அமைச்சர்களில் மிகச் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அமைச்சுக்களில் குறிப்பிட்ட பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்பது தெரிந்ததே.
இவர்களில் சுமார் 20 பேர் இராஜாங்க அமைச்சுக்களை விட்டு விலகுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்திற்குள் அதிகரித்த மோதல்கள். 20இராஜாங்க அமைச்சர்கள் ராஜினாமா. ரணிலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.samugammedia அமைச்சரவை அமைச்சர்களின் கீழ்லுள்ள நிறுவனங்களின் பொறுப்புகளை, இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்காததால் பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சில அமைச்சர்களுக்கு இரண்டு, மூன்று அமைச்சுக்கள் என பத்து பதினைந்து நிறுவனங்கள் இருந்தாலும், ஓரிரு சிறு நிறுவனங்களைத் தவிர, அரச அமைச்சர்களுக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக அமைச்சுக்களுக்குச் சென்று சும்மா வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பல இராஜாங்க அமைச்சர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.அமைச்சுக்களில் பொறுப்புகள் வழங்கப்படாமையால் சில அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் கருத்து மோதல்களும் உருவாகியுள்ளதாக அறியமுடிகின்றது.இரசாங்கத்தில் தற்போது 20 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 38 இராஜாங்க அமைச்சர்களும் பதவி வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.முப்பத்தெட்டு இராஜாங்க அமைச்சர்களில் மிகச் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அமைச்சுக்களில் குறிப்பிட்ட பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்பது தெரிந்ததே.இவர்களில் சுமார் 20 பேர் இராஜாங்க அமைச்சுக்களை விட்டு விலகுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement