• Feb 21 2025

கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிகளவில் நிதி; அஸ்வெசும உதவித்தொகை அதிகரிப்பு - ஜனாதிபதியின் மகிழ்ச்சி அறிவிப்பு

Chithra / Feb 17th 2025, 11:33 am
image

 

ஊழல் நிறைந்த ஆட்சி, தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பொறுப்பற்ற நிர்வாகமே நாடு எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்குக் காரணம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

இன்று 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

அந்த காரணங்களாலேயே மக்கள் வரிசையில் நின்று இறக்க நேரிட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார் 

அத்துடன் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, ஏழை மக்கள் மிகவும் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

முன்னைய சிதைக்கப்பட்ட ஆட்சி மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை என்றும் உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால், ஜனநாயகத்தின் இலட்சியமும் உடைந்தது என்றும் தெரிவித்துள்ளார்

நாம் நமது சொந்த பொருளாதார நிகழ்ச்சி நிரலை அமைத்து பொருளாதார இறையாண்மைக்கு நெருக்கமாக செல்ல வேண்டும்.

எதிர்காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தொடர வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.

சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் வாழ்க்கையையும் உயர்த்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

பொருளாதாரத்தின் சக்திவாய்ந்த பகுதி ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களின் கைகளில் குவிந்துள்ளது.

பொருளாதாரத்தில் அதிக ஜனநாயகமயமாக்கல் தேவை.

அடிமட்டத்தில் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இன்னும் நீங்கவில்லை.பொருட்களின் விலை அதிகரித்துள்ள அளவுக்கு வருமானம் அதிகரிக்கவில்லை.

இதேவேளை 2025 ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும  உதவித்தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி  தெரிவித்துள்ளார். 

மக்களின் உண்மையான ஊதியம் குறைந்துவிட்டதால், நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.

ஜூலை மாதம் முதல் சிரேஷ்ட பிரஜைகளின் வசதிக்காக பணத்தை அதிகரித்துள்ளோம்.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமைப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் அஸ்வெசும கிடைக்காத குடும்பங்களை கண்டறிவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய தேசிய தீர்வை வரி முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க திட்டட்டுள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


இந்த ஆண்டு கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பது எமது முதல் படி, இந்த ஆண்டு 19 பில்லியன் அமெரிக்க டெலர் ஏற்றுமதி வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருவாய் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதியை விரிவுபடுத்துதல்.

தேசிய ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது

நெருக்கடியால் உருவாக்கப்பட்ட சூழ்நிலை ஒரு சிறந்த சூழ்நிலையை உருவாக்க பயன்படுகிறது.

உயர்தர, மலிவு விலையில் மூலப்பொருட்களை அணுகுவதற்கான தடைகளை அகற்ற, எளிமையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான வரி கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய சுங்கச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

இலங்கையின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த வலையமைப்பு விரிவாக்கப்படும். எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிகளவில் நிதி; அஸ்வெசும உதவித்தொகை அதிகரிப்பு - ஜனாதிபதியின் மகிழ்ச்சி அறிவிப்பு  ஊழல் நிறைந்த ஆட்சி, தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பொறுப்பற்ற நிர்வாகமே நாடு எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்குக் காரணம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்இன்று 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்அந்த காரணங்களாலேயே மக்கள் வரிசையில் நின்று இறக்க நேரிட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார் அத்துடன் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, ஏழை மக்கள் மிகவும் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.முன்னைய சிதைக்கப்பட்ட ஆட்சி மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை என்றும் உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால், ஜனநாயகத்தின் இலட்சியமும் உடைந்தது என்றும் தெரிவித்துள்ளார்நாம் நமது சொந்த பொருளாதார நிகழ்ச்சி நிரலை அமைத்து பொருளாதார இறையாண்மைக்கு நெருக்கமாக செல்ல வேண்டும்.எதிர்காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தொடர வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் வாழ்க்கையையும் உயர்த்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.பொருளாதாரத்தின் சக்திவாய்ந்த பகுதி ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களின் கைகளில் குவிந்துள்ளது.பொருளாதாரத்தில் அதிக ஜனநாயகமயமாக்கல் தேவை.அடிமட்டத்தில் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இன்னும் நீங்கவில்லை.பொருட்களின் விலை அதிகரித்துள்ள அளவுக்கு வருமானம் அதிகரிக்கவில்லை.இதேவேளை 2025 ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அஸ்வெசும  உதவித்தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி  தெரிவித்துள்ளார். மக்களின் உண்மையான ஊதியம் குறைந்துவிட்டதால், நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.ஜூலை மாதம் முதல் சிரேஷ்ட பிரஜைகளின் வசதிக்காக பணத்தை அதிகரித்துள்ளோம்.இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமைப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதுவரை காலமும் அஸ்வெசும கிடைக்காத குடும்பங்களை கண்டறிவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.புதிய தேசிய தீர்வை வரி முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க திட்டட்டுள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.இந்த ஆண்டு கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பது எமது முதல் படி, இந்த ஆண்டு 19 பில்லியன் அமெரிக்க டெலர் ஏற்றுமதி வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.2025 ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருவாய் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்றுமதியை விரிவுபடுத்துதல்.தேசிய ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறதுநெருக்கடியால் உருவாக்கப்பட்ட சூழ்நிலை ஒரு சிறந்த சூழ்நிலையை உருவாக்க பயன்படுகிறது.உயர்தர, மலிவு விலையில் மூலப்பொருட்களை அணுகுவதற்கான தடைகளை அகற்ற, எளிமையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான வரி கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புதிய சுங்கச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.இலங்கையின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த வலையமைப்பு விரிவாக்கப்படும். எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement