திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தவசிமடை பகுதியில் புனித அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 59 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த போட்டியில் 725 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டிருந்ததாகவும், போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பெறுமதியான பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இப்போட்டியில் கலந்து கொண்ட வீரர்களில் 59 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்துள்ளனர் எனவும், அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டிக்காக 300க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக் கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் 59 பேர் வைத்தியசாலையில் அனுமதி திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தவசிமடை பகுதியில் புனித அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 59 பேர் காயமடைந்துள்ளனர்.குறித்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த போட்டியில் 725 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டிருந்ததாகவும், போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பெறுமதியான பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இப்போட்டியில் கலந்து கொண்ட வீரர்களில் 59 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்துள்ளனர் எனவும், அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த போட்டிக்காக 300க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.