இந்தியா-வங்கதேசம் நாடுகள் 4096 கி.மீ. நீளம் உடைய எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
இது உலக அளவில் 5வது அதிக நீளமுள்ள எல்லையாகக் கருதப்படுகிறது.
வங்கதேச எல்லை வழியாக நம் பகுதிக்குள் ஊடுருவல், கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதை கட்டுப்படுத்த முள்வேலி அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.
அதுமட்டுமின்றி, வங்கதேசத்தில் சிறுபான்மையினர்களான இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையே, இந்தியா-வங்கதேச எல்லையில் 5 இடங்களில் இந்தியா இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி வேலிகள் அமைக்க முயற்சிப்பதாக வங்கதேச அரசு குற்றம்சாட்டியது.
இந்நிலையில், இதுதொடர்பாக நேரில் விளக்கம் தரக்கோரி அடுத்த சில மணி நேரத்திலேயே இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது.
இதையடுத்து டாக்காவில் வங்கதேசத்திற்கான இந்திய தூதர் பிரணய் வர்மாஇ வெளியுறவு செயலாளர் ஜாஷிம் உதீனைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.
இந்தச் சந்திப்பு குறித்து வங்கதேச இடைக்கால அரசு அறிக்கை எதுவும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்தியா- வங்கதேசம். இந்தியா-வங்கதேசம் நாடுகள் 4096 கி.மீ. நீளம் உடைய எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இது உலக அளவில் 5வது அதிக நீளமுள்ள எல்லையாகக் கருதப்படுகிறது.வங்கதேச எல்லை வழியாக நம் பகுதிக்குள் ஊடுருவல், கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதை கட்டுப்படுத்த முள்வேலி அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.அதுமட்டுமின்றி, வங்கதேசத்தில் சிறுபான்மையினர்களான இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.இதற்கிடையே, இந்தியா-வங்கதேச எல்லையில் 5 இடங்களில் இந்தியா இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி வேலிகள் அமைக்க முயற்சிப்பதாக வங்கதேச அரசு குற்றம்சாட்டியது.இந்நிலையில், இதுதொடர்பாக நேரில் விளக்கம் தரக்கோரி அடுத்த சில மணி நேரத்திலேயே இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது.இதையடுத்து டாக்காவில் வங்கதேசத்திற்கான இந்திய தூதர் பிரணய் வர்மாஇ வெளியுறவு செயலாளர் ஜாஷிம் உதீனைச் சந்தித்தார்.இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.இந்தச் சந்திப்பு குறித்து வங்கதேச இடைக்கால அரசு அறிக்கை எதுவும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.