இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ஓட்டங்களை எடுத்தது.
182 என்ற வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
இறுதியில், இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் இந்திய அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற வித்தியாசத்தில் கைப்பற்றியது.
3-1 க்கு என்ற வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.இந்நிலையில், இரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ஓட்டங்களை எடுத்தது.182 என்ற வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.இறுதியில், இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் இந்திய அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற வித்தியாசத்தில் கைப்பற்றியது.