• Oct 06 2024

இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டி- இந்தியா வெற்றி!

Tamil nila / Jul 7th 2024, 8:50 pm
image

Advertisement

சிம்பாப்வே அணி அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் சுற்றுலா இந்திய அணி 100 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

Harareவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 234 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியுள்ளார்.

அவர் 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து ஆட்டமிழந்தார்.

அத்துடன் Ruturaj Gaikwad 77 ஓட்டங்களையும், Rinku Singh 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 18.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 134  ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Wessly Madhevere அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றதுடன், Luke Jongwe  33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Mukesh Kumar மற்றும் Avesh Khan ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் சிம்பாப்வே 13 ஓட்டங்களால் இந்தியாவை வீழ்த்தி வெற்றிப்பெற்றிருந்தது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இரண்டு அணிகளும் சமநிலையில் உள்ளது.

இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டி- இந்தியா வெற்றி சிம்பாப்வே அணி அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் சுற்றுலா இந்திய அணி 100 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.Harareவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 234 ஓட்டங்களை பெற்றது.அந்த அணி சார்பில் அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியுள்ளார்.அவர் 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து ஆட்டமிழந்தார்.அத்துடன் Ruturaj Gaikwad 77 ஓட்டங்களையும், Rinku Singh 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 18.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 134  ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Wessly Madhevere அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றதுடன், Luke Jongwe  33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Mukesh Kumar மற்றும் Avesh Khan ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.நேற்றைய தினம் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் சிம்பாப்வே 13 ஓட்டங்களால் இந்தியாவை வீழ்த்தி வெற்றிப்பெற்றிருந்தது.ஐந்து போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இரண்டு அணிகளும் சமநிலையில் உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement