• Apr 25 2025

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த தடை

Thansita / Apr 24th 2025, 9:27 pm
image

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 26 பேர் பலியாகியுள்ளனர்

இதனால் .  இதற்கு பதிலடி வழங்கும் வகையில் பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானிய பிரஜைகளும் ஏப்ரல் 29ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வௌியுறவு அமைச்சு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

அத்துடன் சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுகிறது எனவும் இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதேவேளை, இந்தியாவை சேர்ந்த போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை இனி பயன்படுத்த முடியாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளது மேலும் தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைவதற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த தடை ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 26 பேர் பலியாகியுள்ளனர் இதனால் .  இதற்கு பதிலடி வழங்கும் வகையில் பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானிய பிரஜைகளும் ஏப்ரல் 29ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வௌியுறவு அமைச்சு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அத்துடன் சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுகிறது எனவும் இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேவேளை, இந்தியாவை சேர்ந்த போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை இனி பயன்படுத்த முடியாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளது மேலும் தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைவதற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement