• May 03 2024

இந்திய பாராளுமன்றத் தேர்தல் - வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு..!!

Tamil nila / Apr 19th 2024, 10:07 pm
image

Advertisement

இந்தியாவின் மணிப்பூர் மொய்ராங்கிலுள்ள தமன்போக்பி வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

பாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று  காலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வாக்குரிமையைப் பயன்படுத்த வரிசையில் நின்ற வாக்களர்களிடையே வன்முறை ஏற்பட்டுள்ளது. 

இதில் தமன்போக்பி வாக்குச்சாவடியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 

மணிப்பூரின் ஒரு சில இடங்களில் அமைதியின்மை நிலவுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தோங்ஜு சட்டமன்றத் தொகுதியில் உள்ளூர் மக்களுக்கும் அடையாளம் தெரியாத மர்ம நபர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. 

மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங், லுவாங்சங்பாம் மாமாங் லைகாயில் வாக்களித்தார். மாநிலத்தின் பழங்குடி மக்களைக் காப்பாற்றவும், ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்தினார்.

இந்திய பாராளுமன்றத் தேர்தல் - வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு. இந்தியாவின் மணிப்பூர் மொய்ராங்கிலுள்ள தமன்போக்பி வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.பாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று  காலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வாக்குரிமையைப் பயன்படுத்த வரிசையில் நின்ற வாக்களர்களிடையே வன்முறை ஏற்பட்டுள்ளது. இதில் தமன்போக்பி வாக்குச்சாவடியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மணிப்பூரின் ஒரு சில இடங்களில் அமைதியின்மை நிலவுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தோங்ஜு சட்டமன்றத் தொகுதியில் உள்ளூர் மக்களுக்கும் அடையாளம் தெரியாத மர்ம நபர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங், லுவாங்சங்பாம் மாமாங் லைகாயில் வாக்களித்தார். மாநிலத்தின் பழங்குடி மக்களைக் காப்பாற்றவும், ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement