• Nov 28 2024

பிரதமரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் - காந்தி ஜெயந்தியும் அனுஷ்டிப்பு!

Chithra / Oct 2nd 2024, 1:05 pm
image

 

இந்தியாவின் தேச பிதா என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று (02) காந்தி ஜெயந்தி அனுஷ்டிக்கப்பட்டது. 

இதன்போது பிரதமர் ஹரினி அமரசூரியவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அத்தோடு  இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை  சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சமூக ஊடக பதிவில் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை மக்களுக்கான இந்தியாவின் நிலையான அர்ப்பணிப்பு குறித்து இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் பன்முக இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது


பிரதமரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் - காந்தி ஜெயந்தியும் அனுஷ்டிப்பு  இந்தியாவின் தேச பிதா என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று (02) காந்தி ஜெயந்தி அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பிரதமர் ஹரினி அமரசூரியவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அத்தோடு  இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை  சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சமூக ஊடக பதிவில் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,இலங்கை மக்களுக்கான இந்தியாவின் நிலையான அர்ப்பணிப்பு குறித்து இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் பன்முக இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது

Advertisement

Advertisement

Advertisement