• Jan 19 2025

இந்திய உயர்ஸ்தானிகர்- சஜித் விசேட சந்திப்பு..!

Sharmi / Jan 16th 2025, 3:23 pm
image

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில்  கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில், இலங்கையில் உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது

அருகிலுள்ள அண்டை நாடு என்ற வகையில் பல தசாப்தங்களாக இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார். 

அவ்வாறே, நமது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொண்டு, வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்குத் தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்குமாறும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் அவர் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய உயர்ஸ்தானிகர்- சஜித் விசேட சந்திப்பு. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில்  கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.குறித்த சந்திப்பில், இலங்கையில் உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுஅருகிலுள்ள அண்டை நாடு என்ற வகையில் பல தசாப்தங்களாக இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார். அவ்வாறே, நமது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொண்டு, வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்குத் தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்குமாறும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் அவர் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement