• Mar 04 2025

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தியக் கடற்படையின் “குதர்” கப்பல்..!

Sharmi / Mar 4th 2025, 10:48 am
image

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “ஐஎன்எஸ் குதர்” என்ற கப்பல் மூன்று நாள் விஜயமாக நேற்றையதினம்(03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். 

இதன்போது “ஐஎன்எஸ் குதர்” கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் நிதின் சர்மா மற்றும் இலங்கைக் கடற்படையின் மேற்கு கடல்  தளபதி ரியர் அட்மிரல் எம்.எச்.சி.ஜே. சில்வா ஆகியாருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த கப்பல் வருகையின் ஒரு பகுதியாக இலங்கை கடலோர காவல்படையின் சுரக்ஷா கப்பலுக்கு முக்கிய பாதுகாப்பு அமைப்பின் அத்தியாவசிய அங்கமான தீயணைப்பு அமைப்பின் நிரப்பப்பட்ட சிலிண்டர் கையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த கப்பலின் செயல்பாட்டுத் திறன்கள் குறித்து இலங்கை கடற்படை வீரர்களுக்குக் கற்பிக்கும் ஒரு நிகழ்ச்சியும் கப்பலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கப்பல் இலங்கை கடற்படையுடன் விளையாட்டு போட்டிகள் மற்றும் யோகா பயிற்சியையும் மேற்கொள்ளவுள்ளது.

பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பகிரப்பட்ட சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்காக இலங்கை கடற்படையின் திறன்களை அதிகரிப்பதில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, இந்திய கடற்படைக் கப்பலான குதரின் அமைந்துள்ளது.

நாளை மறுதினம் (06)  இப்போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தியக் கடற்படையின் “குதர்” கப்பல். இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “ஐஎன்எஸ் குதர்” என்ற கப்பல் மூன்று நாள் விஜயமாக நேற்றையதினம்(03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். இதன்போது “ஐஎன்எஸ் குதர்” கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் நிதின் சர்மா மற்றும் இலங்கைக் கடற்படையின் மேற்கு கடல்  தளபதி ரியர் அட்மிரல் எம்.எச்.சி.ஜே. சில்வா ஆகியாருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றது.இந்த கப்பல் வருகையின் ஒரு பகுதியாக இலங்கை கடலோர காவல்படையின் சுரக்ஷா கப்பலுக்கு முக்கிய பாதுகாப்பு அமைப்பின் அத்தியாவசிய அங்கமான தீயணைப்பு அமைப்பின் நிரப்பப்பட்ட சிலிண்டர் கையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை குறித்த கப்பலின் செயல்பாட்டுத் திறன்கள் குறித்து இலங்கை கடற்படை வீரர்களுக்குக் கற்பிக்கும் ஒரு நிகழ்ச்சியும் கப்பலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த கப்பல் இலங்கை கடற்படையுடன் விளையாட்டு போட்டிகள் மற்றும் யோகா பயிற்சியையும் மேற்கொள்ளவுள்ளது.பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பகிரப்பட்ட சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்காக இலங்கை கடற்படையின் திறன்களை அதிகரிப்பதில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, இந்திய கடற்படைக் கப்பலான குதரின் அமைந்துள்ளது.நாளை மறுதினம் (06)  இப்போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement